கருப்பு நிற உணவுகளில் இத்தனை சத்துக்கள் இருக்கிறதா?

Health benefits of black foods
Health benefits of black foods
Published on

ருப்பு நிறத்தில் இருக்கும் பழங்கள் மற்றும் உணவுகளில் Anthocyanins என்னும் பிக்மெண்ட் உள்ளது. இதுவே பழங்களும், உணவுகளும் கருப்பு, நீலம், பர்புள் நிறத்தில் இருப்பதற்குக் காரணமாகும். இந்த உணவுகள் இதய சம்பந்தமான நோயை குணமாக்க உதவுகின்றன, சருமப் பளபளப்பு மற்றும் கேன்சரை போக்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. கருப்பு எள்: நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் கருப்பு எள் சற்று கசப்பு சுவையைக் கொண்டது. இருப்பினும், இதில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கும், சருமம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கவும் உதவுகிறது.

2. கருப்பு அத்திப்பழம்: கருப்பு அத்திப் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் எடை இழப்பிற்கும், வயிறு சம்பந்தமான பிரச்னையை சரிசெய்யவும் உதவுகிறது. மேலும். இதிலிருக்கும் அதிகமான மினரல் எலும்பை வலுப்படுத்துகிறது.

3. கருப்பு பூண்டு: கருப்பு பூண்டில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால் பிரீரேடிக்கலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. குடிப்பழக்கம், நோய்தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கல்லீரலை சரிசெய்ய உதவுகிறது. மேலும், கருப்பு பூண்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் நினைவாற்றல் மேம்படுகிறது.

4. கருப்பு அரிசி: கருப்பு அரிசியை உணவில் எடுத்துக் கொள்வதால், உடல் எடையை சீராக வைக்கிறது. உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

5. கருப்பு காளான்: கருப்பு காளானில் அதிகமாக நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது நம் உடலில் உணவு செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. கல்லீரலைப் பாதுகாத்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பயறு வகைகளை ஏன் முளைக்கட்டி சாப்பிடுகிறோம் தெரியுமா?
Health benefits of black foods

6. நாவல்பழம்: இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. நாவல் பழம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

7. பிளாக் பெர்ரி: சூப்பர் புட்டான பிளாக் பெர்ரியில் வைட்டமின், மினரல், ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பிளாக் பெர்ரியை  தினமும் எடுத்துக்கொள்வதால் நினைவாற்றலை அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com