தினமும் ஒரு ‘ஆம்லா ஷாட்’ எடுத்துக்கொள்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

amla shots
amla shots
Published on

‘ஆம்லா’ என்றால் ‘நெல்லிக்காய்’தான். இளம்பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும் நெல்லிக்காய் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையைக் கொண்டது. இதை பரவலாக நம் வீடுகளில் ஊறுகாய் அல்லது மிட்டாய் செய்து சாப்பிடுவார்கள். நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்து வர, நம் உடலுக்கு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. நெல்லிக்காயில் அதிகமாக வைட்டமின் சி உள்ளது. இது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

2. நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்தன்மை உள்ளதால், கல்லீரல் ஆரோக்கியத்தையும், கல்லீரல் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது.

3. நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், நெஞ்செரிச்சல் சரியாகிறது. வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. வயிற்றில் உள்ள அல்சர் புண்ணை ஆற்றுகிறது. மேலும். வயிற்றுப்போக்கை எதிர்க்கும் பண்புகள் நெல்லிக்காயில் உள்ளது.

4. நெல்லிக்காய் ஜூஸை தினமும் எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கிறது.

5. நெல்லிக்காய் முடி உதிர்வதைத் தடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி 90 நாட்கள் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பார்க்கலாம். நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

6. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
இளம் பிள்ளைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள் எவை தெரியுமா?
amla shots

ஆம்லா ஷாட் தயாரிக்க:

தினமும் பருக வேண்டிய ஆம்லா ஷாட் தயாரிக்க, 4 நெல்லிக்காயை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொண்டு, 2 கப் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி டம்ளரில் எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி, சிறிது மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றை சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.

இதை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை நீக்க உதவுகிறது. வைட்டமின் சி உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால் வயிற்றுப்போக்கு சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆம்லா ஷாட் ஒன்று எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com