eggs
eggs

ஆஹா, முட்டையில் இத்தனை சத்துக்களா?

அக்டோபர் 11, உலக முட்டை தினம்
Published on

லகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முட்டைகள் நீண்ட காலமாக முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அதில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. முட்டையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முட்டைகளின் ஊட்டச்சத்து விவரம்:

உயர்தரப் புரதம்: ஒரு நடுத்தர அளவிலான முட்டையில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது. நம் உடலால் சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாத ஒன்பது அத்தியாவசிய அமீனோ அமிலங்களையும் முட்டை வழங்குகிறது. இது தசைப்பலம், வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. முட்டை ஒரு தடகள வீரருக்கு உடல்பலம் சேர்க்கும் அதே நேரத்தில் வயதானவருக்கும் நன்மை சேர்க்கும் உணவாகும்.

வைட்டமின்கள்:

வைட்டமின் பி 12: இது இரத்த சிவப்பணு உருவாக்கம் மற்றும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிப்பதற்கு உதவுகிறது.

வைட்டமின் டி: வைட்டமின் டி, கால்சியம் உறிஞ்சதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வைட்டமின் டி யின் முக்கிய உணவு ஆதாரங்களில் முட்டையும் ஒன்றாகும்.

வைட்டமின் ஈ: ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வைட்டமின் ஈ உயிரணுக்களை ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. நாள்பட்ட நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.

வைட்டமின் ஏ: சிறந்த கண் பார்வை, சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றை தருகிறது,

வைட்டமின் பி2 மற்றும் b6: இவை இரண்டும் உடலின் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உயிர்சக்தியை ஆதரிக்கின்றன.

கனிம உள்ளடக்கம்:

செலினியம்: முட்டையில் உள்ள செலினியம், தைராய்டு செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

இரும்பு: இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு அத்தியாவசியமான இரும்புச்சத்து முட்டையில் உள்ளது

பாஸ்பரஸ்: பாஸ்பரஸ் வைட்டமின் டியுடன் இணைந்து வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது.

துத்தநாகம்: முட்டையில் உள்ள துத்தநாகம், நோய் எதிர்ப்பு செயல்பாடு, புரதத் தொகுப்பு மற்றும் காயங்களை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள்: முட்டையில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன. அவற்றை மிதமாக உட்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை வழங்குகிறது.

கோலின்: மூளையின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்து கோலின். நரம்பியக் கடத்திகளின் தொகுப்பு, உயிரணு சவ்வு உருவாக்கம் மற்றும் மரபணு வெளிப்பாடு ஆகியவற்றில் கோலின் ஈடுபட்டுள்ளது. இதை முட்டை வழங்குகிறது. கோலின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நினைவக செயல்பாட்டையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எடை நிர்வாகம்: முட்டையில் உள்ள புரத உள்ளடக்கம் பசியை கட்டுப்படுத்தவும் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்ப்பது நல்லது. எடையை கட்டுப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
இல்லறம் இனிமையாக கணவன், மனைவியிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?
eggs

இதய ஆரோக்கியம்: முட்டையில் கொலஸ்ட்ரால் இருந்தாலும் இரத்தக் கொழுப்பின் அளவை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இதயநோய் அபாயத்தைக் குறைக்கும்.

தசை ஆரோக்கியம்: முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள புரத உள்ளடக்கம் தசை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு முட்டைகளை உட்கொள்வது தசைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

வசதி: முட்டையை எந்த விதத்தில் வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். காலை முதல் இரவு வரை வெவ்வேறு உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்து, ஆம்லெட் அல்லது தோசை மாவுடன் கலந்து சுடுவது போன்ற பல விதங்கள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com