புரோட்டின் பவுடர் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் பால் அல்லது ஸ்மூத்தியில் புரோட்டீன் பவுடரைச் சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். தசை மற்றும் எலும்பின் வலிமைக்கும் சக்திக்கும் பல உடல் செயல்பாடுகளின் பராமரிப்பிற்கும் புரதம் அவசியம். வயதானவர்கள் பசியின்மை காரணமாக போதுமான புரதத்தை உட்கொள்வதில்லை. அதனால் அவர்கள் புரோட்டின் பவுடரை நாடுகிறார்கள். ஆனால், ஒரு ஸ்கூப் சாக்லேட் அல்லது வெண்ணிலா புரோட்டின் பவுடரில் கூட சில உடல் நல அபாயங்கள் இருக்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர்கள்.
புரோட்டின் பவுடர் (புரத தூள்) என்றால் என்ன?
சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி, உருளைக்கிழங்கு, முட்டை, பால் (கேசீன் அல்லது மோர், புரதம்) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் பவுடர்தான் புரோட்டின் பவுடர். புரதத்தின் தூள் வடிவங்கள் ஆகும். இந்தப் பொடிகளில் சர்க்கரைகள், செயற்கை சுவையூட்டிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற பொருட்கள் சேர்க்கப்படலாம். ஒவ்வொரு ஸ்கூப் புரோட்டீன் பவுடர்களிலும் 10 லிருந்து 30 கிராம் வரையிலும் புரத அளவில் வேறுபாடு இருக்கலாம். தசையை உறுதியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சப்ளிமெண்ட்ஸில் அதிக புரதமும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் சப்ளிமெண்ட்ஸ்களில் புரதம் குறைவாகவும் உள்ளது.
புரோட்டின் பவுடரைப் பயன்படுத்தும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல ஆபத்துகள் உள்ளன.
1. புரோட்டின் பவுடர்கள் டயட்ரி சப்ளிமென்ட் ஆக பயன்படுத்தப்படுகிறது. அந்த பேக்கிங்கில் அந்த உற்பத்தி பொருளை பற்றிய சரியான விவரங்கள் தயாரிப்பாளர்களால் கொடுக்கப்படுவதில்லை.
2. இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நீண்ட கால விளைவுகள் பற்றி யாருக்கும் தெரியாது. இதில் இருக்கும் அதிக அளவு புரதத்தால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். சிலருக்கு பால் ஒவ்வாமை ஏற்படலாம். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் அடிப்படையிலான புரதப் பொடியைப் பயன்படுத்தும்போது இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும்.
3. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கலாம். சில புரோட்டின் பொடிகளில் சர்க்கரை குறைவாக உள்ளது. சிலவற்றில் அதிகமாக உள்ளது. சில புரதப் பொடிகள் ஒரு கிளாஸ் பாலை 1200 கலோரிகளுக்கு மேல் கொண்ட பானமாக மாற்றும் அபாயம் இருக்கிறது.
4. இதனால் எடை அதிகரிப்பதும் இரத்த சர்க்கரையின் அளவும் கூடலாம்.
5. க்ளீன் லேபிள் புராஜெக்ட் என்று அழைக்கப்படும் ஒரு லாப நோக்கற்ற குழு புரதப் பொடிகளில் உள்ள நச்சுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. ஆராய்ச்சியாளர்கள் 134 தயாரிப்புகளை பரிசோதித்தனர்.
பல புரதப் பொடிகளில் கலக்கப்பட்டுள்ள உலோகங்கள் ஈயம், ஆர்சனிக் காட்மியம் மற்றும் பாதரசம், பிஸ்பெனால் ஏ (பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் பிபிஏ) மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற அபாயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 46 கிராம், ஆண்களுக்கு 56 கிராம் புரதமும் தேவைப்படுகிறது. இவர்கள் உணவின் மூலமே அதைப் பெறலாம்.
1. உலர் பழங்கள், பாதாம் போன்ற கொட்டை வகைகள்,
2. காலை உணவுக்கு ஒரு முட்டை (6 கிராம்),
3. மதிய உணவில் 6 அவுன்ஸ் தயிர் (18 கிராம்),
4. சிற்றுண்டிக்கு ஒரு சில கொட்டைகள் (4 முதல் 7 கிராம்),
5. இரவு உணவிற்கு ஒரு கப் பால் (8 கிராம்) மற்றும் 2 அவுன்ஸ் சமைத்த கோழி இறைச்சி (14 கிராம்),
6. முழு உணவுகளிலிருந்து புரதத்தைப் பெறலாம்,
கொட்டைகள், விதைகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் (தயிர், பால், சீஸ்), பருப்பு வகைகள் (பீன்ஸ், பருப்பு), மீன், கோழி, முட்டை.