பயணத்தில் வாந்தி தொந்தரவா? உடனடி நிவாரணம் தரும் எளிய வழிகள்!

Vomit sensation while travelling
Vomit sensation while travelling
Published on

சிலருக்கு பஸ், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. இதனால் வெளியூரே போகாமல் வீட்டிலேயே இருந்து விடலாம் என்று கூட சிலர் நினைப்பார்கள். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? அதற்கான எளிய தீர்வு என்ன? என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

காரில் அல்லது பஸ்ஸில் பயணிக்கும் போது வாந்தி வருவது போல ஏற்படும் உணர்வை Motion sickness என்று சொல்வார்கள். இந்த பிரச்னை நிறைய பேருக்கு உண்டு. எதனால் இது ஏற்படுகிறது என்றால், நாம் நடந்து போகிறோம் என்பது மூளைக்கு பல்வேறு சிக்னல் மூலமாக தெரிகிறது. கண்கள் நாம் நகர்வதை பார்க்கிறது. அதுப்போல நம் காதுகளில் Vestibular apparatus என்று ஒன்று உள்ளது. அது நாம் சரியாக Balanced ஆக இருக்கிறோமா? என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கும்.

நம்முடைய மூட்டுகளில் proprioceptors என்ற ரிசெப்டார்ஸ் இருக்கும். அதுவும் இந்த நபர் நகர்கிறார் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கும். ஆனால், இப்போது காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்யும் போது கண்கள் நாம் நகர்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு தருகிறது. ஆனால், காது மற்றும் மூட்டு நாம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கிறோம் என்ற சிக்னலை மூளைக்கு கொடுக்கிறது. இதனால் மூளைக்கு தாறுமாறாக சிக்னல் கிடைக்கிறது. 

இதனால் மூளையில் Area postrema என்ற இடத்தில் இருந்து வாந்தி (Vomit) ஏற்படுத்தும் உணர்வை தூண்டிவிடும். இதனால் தான் நிறைய பேருக்கு பயணம் செய்யும் போது வாந்தி (Vomit) ஏற்படுகிறது. மூளையை பொருத்தவரை மனிதன் உட்கார்ந்த இடத்திலேயே நகர்கிறான் என்றால், ஏதோ விஷப்பொருளையோ அல்லது போதை பொருளையோ சாப்பிட்டு விட்டான் என்று மூளை நினைத்துக் கொள்ளும். அதனால் தான் இதுப்போன்ற visual Hallucinations வருகிறது என்று எண்ணி அதை வெளியே தள்ள வேண்டும் என்பதால் தான் வாந்தி வருகிறது. 

காரை ஓட்டுபவர்களுக்கு இதுப்போன்ற உணர்வுகள் ஏற்படாது. இதுவே காரில் பின்பக்கயாக அமர்ந்து செல்பவர்களுக்கு வாந்தி(Vomit) வரும். அதற்கான காரணம் கார் ஓட்டுபவர்கள் நகரும் மற்ற கார்களை பார்ப்பதால் மூளைக்கு 'நாம் நகர்கிறோம்' என்ற சிக்னல் ஸ்ட்ராங்காக கிடைக்கும். எனவே, காரில் செல்லும் போது நீங்கள் காரை ஓட்டிச் செல்லுங்கள் அல்லது முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டு செல்லுங்கள்.

பஸ்ஸில் சென்றால் ஜன்னல் சீட்டில் அமர்ந்து தூரத்தில் தெரியும் பொருட்களை பார்த்துக் கொண்டே செல்லுங்கள். பயணம் செய்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிட வேண்டாம். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், அதிக கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். 

இதையும் படியுங்கள்:
இரவில் பிரஷ் செய்த பிறகு இதை மட்டும் செய்யாதீர்கள்! பல் சொத்தைக்கு 100% உத்தரவாதம்!
Vomit sensation while travelling

இஞ்சி, எழுமிச்சை போன்றவற்றை நுகரும் போது வாந்தி வரும் உணர்வு சற்றுக் குறையும். மொபைல், அல்லது புத்தகத்தை பார்த்துக் கொண்டு கண்டிப்பாக பயணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இந்த உணர்வு அதிகமாகும்.

இதையும் படியுங்கள்:
பழுப்பு / மஞ்சள் நிறப் பற்களைக் கொண்டவரா நீங்க? இதுதான் காரணம்... உடனே கவனியுங்க!
Vomit sensation while travelling

Regular வாந்திக்கு கொடுக்கக்கூடிய மருந்துகள் மருந்துகளெல்லாம் இந்த பிரச்சனையை சரி செய்யாது. இதற்கான சிகிச்சை வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com