அடிக்கடி பதட்டம் ஏற்படுகிறதா? அப்போ இதை செய்யுங்க!

Stress
Stress
Published on

சிலருக்கு ஒரு சிறு வேலை செய்தாலோ, அல்லது ஒரு சின்ன செய்தியை கேட்டாலோ அல்லது சும்மா இருக்கும் நேரத்திலேயே திடீரென்று பதட்டம் வரும். அதை சரி செய்ய சில டிப்ஸ் பார்ப்போம்.

பொதுவாக இந்த பதட்டம் மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கே ஏற்படும். இப்போதெல்லாம் சிறு வயதிலிருந்தே இந்த பதட்டம் ஏற்படுகிறது. இது மிகவும் மோசமான ஒன்று.

அந்தவகையில், பதட்டத்தைப் போக்கக்கூடிய சில வழிகளைப் பார்ப்போம்.

மூச்சுப்பயிற்சி:

மன அழுத்தம், டென்ஷன் போன்றவை ஏற்படும்போது கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள். இப்படி 3-5 நிமிடங்கள் செய்தாலே போதும் உடனடியாக அழுத்தம் குறைந்துவிடும். ஆகையால், டென்ஷன் ஏற்படும்போதெல்லாம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

உடற்பயிற்சி:

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை, குறைந்தது 5 நாட்களுக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாக இருந்தால், நம்மையே அரியாமல் பதட்டம், கோபம், எரிச்சல் அடைவோம். ஆனால், உடற்பயிற்சி செய்தால், மூளையில் எண்டோர்பின் மகிழ்ச்சி ஹார்மோன்கள் இயற்கையாக அதிகரிக்கும்.

வாய்விட்டு சிரியுங்கள்:

டென்ஷானாக இருக்கும்போது காமெடி படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் பேசுவது போன்றவற்றில் கவனத்தை திசைத்திருப்புங்கள். எந்த அளவுக்கு அதிகம் சிரிக்கிறீர்களோ, அந்தளவு டென்ஷன் உங்களை நெருங்காது.

தூக்கம்:

இரவில் நன்றாக தூங்காமல் இருந்தாலே, காலையில் எரிச்சல் ஏற்படும். ஆகையால், இரவு தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மையும், மன அழுத்தமும் இருந்தாலே பாதி வாழ்நாளை குறைத்துவிடும். எனவே, தினமும் இரவில் 7-8 மணிநேரம் கண்டிப்பாக தூங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
50 வயதுக்கு மேல் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்! 
Stress

டீ, காபி குறையுங்களேன்:

கஃபினும், மன அழுத்தமும் சேர்ந்து மூளையில் கார்டிசோலின் ஹார்மோனை அதிகரிக்கும். புத்துணர்வாக இருக்க வேண்டும் என்று டீ குடிப்போம். ஆனால், உண்மையில் அது டென்ஷனை அதிகரிக்கும். ஆகையால், ஒருநாளைக்கு இரண்டு கப் டீ குடித்தால் போதும்.

வாக்கிங்:

பதட்டமாகும் சமயத்தில், ஒரு ஐந்து நிமிடம் இயற்கை நிறைந்த இடங்களுக்குச் செல்லுங்கள். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், மூச்சின்மீது கவனம் செலுத்துங்கள். அந்த சமயத்தில் காலில் செருப்பில்லாமல் நடங்கள். இது உங்களின் மன அழுத்தத்தை சரி செய்யும்.

 மன அழுத்தம் ஏற்படும் சமயத்தில் இந்த வழிகளைப் பின்பற்றுங்கள். பதட்டமே பதட்டமாகி ஓடிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com