Stressஸா இருக்கீங்களா? அப்போ Cool ஆக இந்த உணவுகளை சாப்பிடலாமே!

Foods that reduce stress
Foods that reduce stress
Published on

ற்போதுள்ள நவீன உலகில், ஸ்ட்ரெஸ் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. வேலை பளு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது. நம் உடலில் உள்ள கார்டிசோல் என்னும் ஹார்மோனே ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.

இந்த ஹார்மோன் உடலில் அதிகரிப்பதன் காரணமாக ஸ்ட்ரெஸ்ஸும் அதிகரிக்கும். காபி குடித்தல், மது அருந்துதல், சர்க்கரை போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்வதே இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகமாக சுரக்க வைக்கிறது. எனவே, உணவில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல், குறைத்துக் கொள்வது சிறந்தது. ஸ்ட்ரெஸ் வரும்பொழுது அதை எளிதில் கையாள்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Chamomile Tea: ஒரு கப் சூடான Chamomile Teaஐ அருந்துவதால், நம் உடல் ரிலாக்ஸாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த டீ ஒரு சிறந்த Stress reliever ஆகும். Chamomile Teaஐ அருந்துவதால், நல்ல செரிமானம், தூக்கம் கிடைக்கிறது. உடலில் உள்ள ஸ்ட்ரெஸ்ஸும் குறைகிறது. எனவே, இந்த டீயை அருந்துவது அதிகப்படியான மன அழுத்தம், டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து நம்மை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது.

2. Dark Chocolate: டார்க் சாக்லேட் சாப்பிடுவது பசியை குறைப்பது மட்டுமில்லாமல், நம் உடலில் உள்ள Happy hormone என்று சொல்லப்படும் எண்டார்பின்களை அதிகரிக்கிறது. டார்க் சாக்லேட்டில் உள்ள 70 சதவீதம் கொக்கோ ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து Endorphins சுரக்க உதவுகிறது. இதனால் நாம் ஸ்ட்ரெஸ் குறைந்து மகிழ்ச்சியான மனநிலையை உணர முடியும்.

3. Almonds: உடனடியாக ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், கை நிறைய பாதாமை எடுத்துச் சாப்பிடுங்கள். ஏனெனில், பாதாம் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் ஆகும். பாதாமில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்டிசாலை குறைக்கிறது.

4. Creamy Yogurt: நல்ல கெட்டியான தயிரில் ப்ரோபயாடிக் மற்றும் புரதம் உள்ளது. ப்ரோபயாடிக் குடல் ஆரோக்கியத்தையும், மன அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. மேலும், புரதம் நாள் முழுவதும் உடலில் சக்தியை தக்க வைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தினமும் ஒரு ‘ஆம்லா ஷாட்’ எடுத்துக்கொள்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Foods that reduce stress

5. Orange: ஆரஞ்சில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஹார்மோனைக் குறைத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால், உடலில் கார்டிசாலின் அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல், பதற்றமான சமயத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இந்த 5 உணவுகளை எடுத்துக் கொள்வதால், ஸ்ட்ரெஸ்ஸை எளிதாக குறைக்கலாம். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com