செயற்கை நகங்கள் - பார்வைக்கு அழகு; ஆனால், பக்க விளைவுகள் உண்டு!

Artificial nails
Artificial nails
Published on

பொதுவாக இளம் பெண்கள் நகங்களை நீளமாக வளர்த்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். சிலருக்கு விரைவில் நகங்கள் உடைந்து, அவர்கள் ஆசைபட்டவாறு நீளமான நகங்கள் கிடைக்காது. அப்போது உண்மையான நகங்களுக்கு பதில் செயற்கையான நகங்களைப் பயன்படுத்தி ஒரு நாகரிகமான தோற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நக நீட்டிப்புகள் அல்லது செயற்கை நகங்கள் போன்றவை கைகளுக்கு அழகை தரும் என்றாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம்.

இவற்றால் எந்தத் தீங்கும் இல்லாத போதும் அவற்றை நகங்களில் அணியும் போதும், நீக்கும் போதும் அமிலங்கள் மற்றும் பிற ரசாயனங்கள் தேவைப்படுகின்றன. அவை உடலுக்கு பல்வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

1. நகங்கள் சேதமடைதல்

செயற்கை நகங்களைப் பொருத்தும் போதும் அவற்றை நீக்கும் போதும் அசிட்டோன் என்கிற ரசாயனம் பயன்படுத்துகிறார்கள். இது இயற்கையான நகங்களை கணிசமாக மெலிதாக்கி பலவீனப்படுத்தும். எனவே, அவை விரைவில் உடையக் கூடும்.

2. நகப்பிரிப்பு

செயற்கை நகங்கள் பொருத்தினாலும், உண்மையான நகங்கள் உள்ளே வளர்ந்து கொண்டுதான் இருக்கும். செயற்கை நகங்களுக்கும் இயற்கையான நகத்தட்டுக்களுக்கும் இடையிலான பிணைப்பு வலுவானதாக இருக்கும். செயற்கை நகங்களை தினமும் பயன்படுத்தும் போது நகத்தட்டுக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி நகத்தை விரைவாக பலவீனமாக்கும். மேலும் தொற்று நோய்களுக்கான இடமாகவும் மாற்றிவிடும்.

3. அலர்ஜி

பசைகள், ஜெல், பாலிஷ்கள் மற்றும் அக்ரிலிக் உள்ளிட்ட பல செயற்கை நகப் பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன. இவை ஒவ்வாமையை ஏற்படுத்தி சரும அலர்ஜியை தூண்டும். இதனால் சரும அரிப்பு, சிவந்து போதல், வீக்கம், சருமம் உரிந்து போதல் மற்றும் வறட்சி ஆகியவை ஏற்படும். நகங்களைச் சுற்றி மட்டுமல்ல விரல்கள், கைகள், முகம், மற்றும் கண் இமைகளில் கூட செதில் போன்ற திட்டுகளை ஏற்படுத்தலாம்.

4. பூஞ்சைத் தொற்றுகள்

செயற்கை நகத்திற்கும், இயற்கையான நகத்திருக்கும் இடையில் ஈரப்பதம் சிக்கி பூஞ்சைகள் செழித்து வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால் நகங்கள் தனது இயற்கையான இளம் சிகப்பு நிறம் மாறி பச்சை, பழுப்பு அல்லது மஞ்சள் போன நிறங்களுக்கு மாறக்கூடும். பாக்டீரியா தொற்றுகளும் ஏற்படலாம். இதனால் நகத்தைச் சுற்றி வீக்கம், வலி, சிவத்தல் மற்றும் சீழ் பிடித்தலும் ஏற்படலாம்.

5. சுகாதாரத் தொற்று

பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் போதுமான சுகாதாரமின்மையால் புற்று நோய்களுக்குக் வழி வகுக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்:
மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - தமிழக அரசின் செயலி!
Artificial nails

6. கடுமையான ரசாயனப் பாதிப்பு

செயற்கை நகப் பொருட்கள் மற்றும் நீக்கிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சருமத்திற்கு வறட்சியை தருவதோடு எரிச்சலையும் உண்டாக்கும். இதிலிருந்து வரும் புகை குறிப்பாக காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் கண் மற்றும் சுவாச எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் பக்க விளைவுகளைத் தரும் நக நீட்டிப்புகளைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு செயற்கை நகங்களை பயன்படுத்த வேண்டும்.

பக்க விளைவுகளைக் குறைக்க சில யோசனைகள்:

உங்கள் இயற்கையான நகங்கள் மீண்டு வர இடம் தர வேண்டும். ஒவ்வொரு சில மாதங்களுக்கும் செயற்கை நகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் செயற்கை நகங்களில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையான நகங்கள் சுவாசிக்கவும், வளரவும் ஏதுவாக இருக்கும். தினமும் செயற்கை நகங்கள் அணிவதற்கு பதிலாக எப்போதாவது அரிதாக அணியலாம்.

இதையும் படியுங்கள்:
அழகை மெருகூட்ட எலுமிச்சை புல்; உடல் பொலிவு பெற 3 இயற்கை ஸ்க்ரப்ஸ்
Artificial nails

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com