ஆட்டிசம் அறிகுறிகளும் குடல் நுண்ணுயிரிகளும் - ஒரு புதிய ஆய்வு!

Autism
Autism
Published on

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி  பாதிப்புக்கும், அவர்களின் குடலில் உள்ள நுண்ணுயிரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.  அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட  இந்த ஆய்வு, குடல் ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தது. இதில், 8 முதல் 17 வயது வரையிலான 43 ஆட்டிசம் உள்ள குழந்தைகளும்,ஆட்டிசம் இல்லாத 41 குழந்தைகளும் பங்கேற்றனர்.

ஆய்வில், ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் குடலில் உள்ள  நுண்ணுயிரிகளின் அமைப்பு, மற்ற குழந்தைகளை விட  வித்தியாசமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த  நுண்ணுயிரிகள், உணவை செரிக்க உதவுவதோடு, உடலின்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆய்வு முடிவுகளின்படி, ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் குடலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவு குறைவாக இருந்தது. இது  அவர்களின் மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்று  ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு சமூகத் தொடர்புகளில் சிரமம், புரிந்து கொள்ளுதலில் சிக்கல் போன்ற பிரச்சினைகள்  அதிகமாக இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. இதற்கு  அவர்களின் குடல் ஆரோக்கியமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு செரிமான பிரச்சினைகள், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்றவை பொதுவாக இருப்பதாக ஆய்வு  கூறுகிறது. இவை அவர்களின் நடத்தையையும்  மனநிலையையும் மேலும் பாதிக்கின்றன.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான லிசா அசிஸ்-சாதேத் கூறுகையில், "குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருந்தால், அவர்களுக்கு குடல்  தொடர்பான பிரச்சினைகளும் அதிகமாக இருக்கின்றன. இதை  சரிசெய்வதன் மூலம் அவர்களின் நடத்தையில் நல்ல  மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்,”  என்றார். ஆய்வு முடிவுகள், குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதன் மூலம் ஆட்டிசம் அறிகுறிகளை குறைக்கும்  புதிய வழிகளை உருவாக்க உதவலாம் என்று ஆய்வாளர்கள்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஆவி பிடிக்கும் போது இந்தப் பொருட்களை சேர்க்க மறந்துடாதீங்க! 
Autism

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வுகளும், குடல் மற்றும் மூளைஇடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளன. குடலில் உள்ள நுண்ணுயிரிகள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.  இதை “குடல், மூளை தொடர்பு” என்று அழைக்கிறார்கள். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு இந்த தொடர்பு சற்று வித்தியாசமாக செயல்படுவதாக ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு, ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய  வழிகளை உருவாக்குவதற்கு முக்கியமான தகவல்களை  வழங்கியுள்ளது. எதிர்காலத்தில், குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள் ஆட்டிசம் அறிகுறிகளை  குறைக்க உதவலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  மேலும், பெற்றோர்களுக்கு இது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. சோபியா ரிங்கோல்டு என்ற மாணவி ஆய்வு குழுவில் பங்கேற்று, “ஆட்டிசம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்போது அவர்களின்  அறிகுறிகளும் குறையலாம்,” என்று கூறினார்.

இந்த ஆய்வு, ஆட்டிசம் பற்றிய புரிதலை மேம்படுத்துவதோடு,  குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.

இதையும் படியுங்கள்:
இரவு நேரம் கடந்து சாப்பிடுவதால் இந்த நோய்களெல்லாம் வருமா?
Autism

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com