ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு சிக்கலான நோய். இதனால், சமூக இணக்கம், பேச்சு, நடத்தை, மனநலம், கூடி விளையாடுதல் போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்து ஆட்டிசத்தை கண்டறிய முடியும்.
ஒரு வயது வரை புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ குழந்தை இருப்பது, ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.
குறிப்பாக பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது, வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, சமூகத் திறனில் குறைபாடு இருப்பது, பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலை பாயவிடுவது, நிறைய பொருட்கள் பொம்மைகளுடன் இருப்பது; அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது, எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது...
இதுபோன்ற அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம். தவறினால் வளர, வளர குழந்தைகளின் செயல்பாட்டில் தென்படும் மாறுதல்களை வைத்து அடையாளம் காணலாம்.
ஆட்டிசம் என்றாலே அது ஒரு நோயை போல கருதி கொள்கிறார்கள். ஆனால், இது ஒரு குறைபாடுதான். போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதிலிருந்து மீள்வதற்கும் வழிகள் உண்டு.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பேச்சாற்றலை மேம்படுத்தவும் , அவர்களின் நடவடிக்கைகள் நார்மலாக மாறவும் பீட்டா குளூட்டன் அதிகமுள்ள உணவுகள் உதவுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 3 கிராம் பீட்டா குளூட்டன் தினமும் தொடர்ந்து 8 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ASD, குழந்தைகளின் நடவடிக்கை, அவர்களின் கற்கும் ஆற்றல் மற்றும் பேசும் ஆற்றல் மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதை சப்ளிமென்டாக கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர் - பீட்டா குளூட்டன் அதிகமுள்ள உணவுகள் தானியங்கள் பார்லி , ஓட்ஸ், சோளம், கம்பு, காளான், கடல் பாசி.
ஆட்டிசம் பாதித்து மனநலக் குறைபாடு நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் குழந்தைகளுக்கு புருக்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அதிகளவில் கொடுத்து பார்த்ததில் அவர்களின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தென்பட்டது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் இளம் வயதினரிடம் இந்த காய்கறிகளை 4 வாரங்களுக்கு சாப்பிட கொடுத்ததில் அவர்களின் நடத்தையும், அவர்களின் பேசும் திறனும் மேம்பாட்டதாக லண்டன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் அந்த காய்கறிகளில் உள்ள 'சல்போரோபான்' எனும் இரசாயனம் தான் என்கிறார்கள்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் காளான் உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலுள்ள 'NGF' எனும் ரசாயனம் மூளை நரம்புகளை பலப்படுத்தி மூளை சம்பந்தமான குறைபாடுகளை தவிர்க்கிறது என்கிறார்கள் மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களின் கஞ்சியோ, கூழோ தினமும் ஒரு கின்னம் சாப்பிடும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் தீவிரம் குறைவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கடற்பாசி EPA மற்றும் DHA ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவாகும். இது தைராய்டு செயல்பாட்டை அதிகரித்து , மூளை செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவுகிறது. கடற்பாசி தற்போது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.
வால் நட், பாதாம் பிஸ்தா, உலர் பருப்புகள், பயறு வகைகள், வெள்ளரிக்காய்,முள்ளங்கி, கத்திரிக்காய், புரோக்கோலி, உருளைக்கிழங்கு, சோளம், முட்டைக்கோஸ், முளைகட்டிய தானியங்கள் , கீரைகள், டர்னிப் ,பீட் ரூட், கேரட், பூசணி, சோயா பீன்ஸ், பட்டாணி, பொதுவான பீன்ஸ், பருப்பு, பச்சை இலைக் காய்கறிகள், சீமை சுரைக்காய், அஸ்பாரகஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆலிவ், குங்குமப்பூ, சூரியகாந்தி, சாம்பல் பூசணி போன்றவை மூளையின் ஆற்றலையும் மேம்படுத்தி ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவும் உணவுகள் .
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்சாடர் குழந்தைகள் நீரேற்றமாக இருக்க நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவும். சர்க்கரை பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள் மற்றும் தண்ணீரை முதன்மை பானமாக ஊக்குவிக்கவும். இது மலச்சிக்கல் போன்ற பொதுவான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.