இந்த ஐந்து முறைகள்படி உட்கார்ந்தால் உடல் வலி, முதுகு வலியை தவிர்க்கலாம்!

ஒருவர் எப்படி உட்காருகிறார், எப்படி நிற்கிறார், சாப்பிடும் போது எப்படி உட்காருகிறார் , உறங்கு போது எப்படி உடலை வைத்துக்கொள்கிறார் உள்ளிட்ட Body Posture என்றழைக்கப்படும். உடல் தோரணை மேம்படுத்துவதால் உடல் வலி, முதுகு வலி, தசை பிடிப்பு, மூட்டு வலி, பாத வலி, போன்றவை வராமல் இருக்க உதவும். எந்த நேரங்களில் எப்படி நாம் உட்கார வேண்டும் என்பதை பார்ப்போம்...
இந்த ஐந்து முறைகள்படி உட்கார்ந்தால் உடல் வலி, முதுகு வலியை தவிர்க்கலாம்!

1. கணினியில் வேலை செய்யும்போது

கணினியில் வேலை செய்யும்போது நீங்கள் கணினியை நேராக பார்ப்பது போல் வைத்துக்கொள்ளவும். அதேபோல் கீப்போர்டை முழங்கைக்கு நேராக வைத்து டைப் செய்வதற்கு ஏதுவாக வைத்துக்கொள்ளவும். நிமிர்ந்து நேராக உட்கார்ந்து தோள்பட்டையை தளர்த்திக்கொண்டு உட்காரவும். பாதம் தரையில் சமமாக படும் அளவிற்கு நாற்காலியை சரி செய்து கொள்ளவும். கால்களை குறுக்காக வைத்துக்கொள்ளக்கூடாது. இப்படி செய்வதினால் முதுகெலும்பு நேராகி உடல் வலிகள் குறையும்.

2. செல்போன் பயன்படுத்தும் போது

தொலைபேசி பயன்படுத்தும்போது அதிக நேரம் தலையை முன்பக்கமாகவோ, குனிந்து பார்ப்பதாலோ தோள் வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். ஆகையால் கண்களுக்கு நேரெதிராக தொலைபேசியை வைத்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே நிலையில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

3. நடக்கும்போது

ஹீல்ஸ் அணிவது எவ்வளவு அழகாக இருந்தாலும் அதே அளவுக்கு பாத வலியையும் தரக்கூடியது. ஹீல்ஸ் அணிந்துக்கொண்டு அதிகநேரம் நடப்பதால் முட்டி மற்றும் பாத வலியை ஏற்படுத்துகிறது. டாக்டர்கள் சாதாரணமாக தரையை ஒட்டி இருக்கும் செருப்புகளை அணியவே வலியுறுத்திகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கல்லீரலைக் காக்கும் பூண்டு ஜூஸ்!
இந்த ஐந்து முறைகள்படி உட்கார்ந்தால் உடல் வலி, முதுகு வலியை தவிர்க்கலாம்!

அப்போதுதான் பாதங்கள் தரையோடு சமமாக இருக்கும். இதனால் முதுகு தண்டு நேராக இருக்கும். ஒருவேளை ஹீல்ஸ் அணிந்தே ஆக வேண்டும் என்றால் மிதமான உயரத்தில் அணிவது நல்லது.

4. தூங்கும்போது..

www.helptohealthchiropractic.co.uk

அனைத்தையும் விட தூங்கும்போதுதான் உடல் அமைப்பை சரியாக வைத்துக்கொள்ளவும். மிக மென்மையாக இருக்கும் மெத்தையை விட உறுதியான மெத்தையை தேர்ந்தெடுப்பது நல்லது. அதேபோல் மெலிதான தலையணை பயன்படுத்திக்கொண்டால் முதுகுவலியை தவிர்க்கலாம். தலையணையை கால்களுக்கு இடையில் வைத்துகொள்வது நல்லது ஆனால் கட்டிபிடித்து தூங்குவதை தவிர்க்கவும். குப்புறப்படுத்து தூங்குபவர்கள் தட்டையான தலையணை அல்லது தலையணை இல்லாமல் தூங்குவது உடம்புக்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com