தினம் தினம் செய்யும் சிறு சிறு தவறுகள்... உங்க நாள்பட்ட முதுகு வலிக்கு காரணங்கள்!

நாள்பட்ட முதுகு வலி
நாள்பட்ட முதுகு வலி
Published on

இளம் வயதிலேயே சிலருக்கு முதுகின் கீழ்ப்புறம் வலி ஏற்பட்டு விடுகிறது. இந்த வலி நாள்பட்டதாக இருந்தால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். என்ன வைத்தியம் செய்தும் பலன் இல்லை. எவ்வளவுதான் மாத்திரைகள் சாப்பிடுவது என்று அலுப்பு தட்டுகிறதா? முதலில் அதற்கு உண்டான காரணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. நீங்கள் படுத்துக்கொண்டே மொபைல் போனை பார்ப்பவராக இருக்கலாம். அல்லது கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தால்தான் தூக்கம் வரும் என்ற கேட்டகிரியாக இருக்கலாம். எது எப்படியோ படித்துக்கொண்டே கைகளை உயர்த்திப் பிடித்து இவ்வாறு செய்வதால் முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் வலி உண்டாகலாம்.

2. அதிக தித்திப்பு உள்ள சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? அப்படி இருந்தால் அந்த சர்க்கரை பொருளானது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் முதுகு எலும்பில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகும். அதனால் அதிக தித்திப்பு உள்ள குளிர்பானங்களை தவிர்த்தல் நல்லது.

3. நீங்கள் பல் தேய்க்கும் பொழுது வாஷ்பேசினில் குனிந்த படி அதிக நேரம் நிற்பவரா? தவிர்த்துக் கொள்ளுங்கள். நிமிர்ந்தபடி பல் தேய்த்துக் கொள்ளுங்கள். வாய் கொப்பளிக்கும் பொழுது மட்டும் குனிந்து வாஷ்பேசினில் துப்பிக் கொள்ளுங்கள்.

4. ஆண்களில் பலர் ஷேவ் செய்து கொள்ளும் பொழுது கண்ணாடிக்கு முன்னால் தங்கள் உடலை சில கோணங்களில் வளைத்துக் கொண்டோ, கண்ணாடியின் உயரத்திற்கு தங்கள் உடம்பைக் குறுக்கிக் கொண்டோ ஷேவ் செய்து கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அப்படி செய்யாமல் தங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு கண்ணாடியை பொருத்திக் கொண்டு ஷேவ் செய்வது நல்லது.

5. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருந்தாலும் இந்த முதுகு வலி ஏற்படும். அவ்வப்பொழுது எழுந்து சிறிது தூரம் நடந்து விட்டு, பிறகு வந்து வேலை செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். முதுகில் அழுத்தமும் ஏற்படாது.

6. கார் ஓட்டும் பொழுது சிலர் முன்பக்கத்தில் நகர்ந்து அமர்ந்து கொண்டு கார் ஓட்டுவார்கள். ஏனென்றால் உயரம் சரியாக அமைந்திருக்காது. அப்படி அல்லாமல் கார் சீட்டிற்கு மேல் கார் சீட்டுக்கென்றே பிரத்தியேகமாக வரும் சில உயரமான உபகரணங்களை வாங்கி, அதில் அமர்ந்து கார் ஓட்டினால் முதுகில் வலி ஏற்படாது.

இவற்றையெல்லாம் முயற்சி செய்துதான் பாருங்களேன். முதுகு வலி பறந்து போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
நடைப்பயிற்சி: நீடித்த ஆரோக்கியத்திற்கு எளிய வழி!
நாள்பட்ட முதுகு வலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com