டயட் இருக்கும்போது செய்யக்கூடாத 6 தவறுகள் என்னென்ன தெரியுமா?

Avoid These Common Mistakes in Your Diet
Avoid These Common Mistakes in Your Diet

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நாம் நோயின்றி இருப்பதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். இருப்பினும் பலர் தங்களின் உணவுத் தேர்வுகளில் தவறுகளை செய்கிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சிலர் டயட் இருப்பதிலும் தவறுகளை செய்கின்றனர். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. 

  1. உணவைத் தவிர்ப்பது: டயட் இருக்கிறேன் என்கிற பெயரில் உணவை சிலர் முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள். இது அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்கும். டயட் இருப்பதென்பது நீங்கள் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதல்ல, சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதாகும். எனவே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கக்கூடிய சீரான உணவை நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். 

  2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் அதிக சர்க்கரை உள்ளன. அதே நேரத்தில் அவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இல்லை. ஆனால், சாப்பிட ருசியாக இருப்பதால், உடல் எடை அதிகரிப்பு, ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இது அதிகரிக்கும். எனவே டயட் இருப்பவர்கள் பழங்கள், காய்கறிகள் புரதங்கள், ஆரோக்கிய கொழுப்புகள் போன்ற பதப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுங்கள். 

  3. பகுதி கட்டுப்பாட்டை கவனிக்காமை: ஆரோக்கியமான உணவுகள் கூட அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதற்கு பகுதிக் கட்டுப்பாட்டை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதாவது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு உணவை எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கணக்கிட்டு சாப்பிடுங்கள். 

  4. பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது: பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. அவை உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன. இருப்பினும் பலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கின்றனர். நீங்கள் எந்த அளவுக்கு இவற்றை அதிகமாக சாப்பிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருக்கலாம். எனவே இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துங்கள். 

  5. நீரேற்றத்தை புறக்கணித்தல்: டயட் இருக்கும் பலருக்கு தாங்கள் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. தினசரி போதிய அளவு தண்ணீர் குடித்தாலே நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். நீரிழப்பு உங்கள் ஆற்றலை பாதித்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக கோடைகாலங்களில் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. 

  6. பசியை கட்டுப்படுத்த முடியாமை: டயட் இருக்கும் பலரால் தங்களது பசியைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே அதனால் மன அழுத்தம், சலிப்பு மற்றும் பிற உணர்ச்சிகள் ஏற்பட்டு அதிகமாக உணவை சாப்பிட்டு விடுகின்றனர். இத்தகைய உணர்ச்சி தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்கு தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதிகமாக பசித்தால் குறைந்த கலோரி இருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். 

இதையும் படியுங்கள்:
Oh My God! திரவ டயட் இருந்தால் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாமா? 
Avoid These Common Mistakes in Your Diet

இது தவிர உணவை முறையாக திட்டமிட்டு சாப்பிட்டால் மட்டுமே, நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை அடைய முடியும். எனவே டயட் இருக்க வேண்டும் என்பதற்காக ஏதோ ஒன்றை கடைபிடிக்காமல், முறையாக அனைத்தையும் தெரிந்து கொண்டு டயட் இருந்தால், உடல் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com