உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் நம் வேலையைச் சரிவர செய்ய முடியும். நோய் எதுவாக இருப்பினும் அதற்கு மருத்துவம் செய்ய வேண்டும்.
அலோபதி:
இது உலகம் முழுவதும் எந்த சிகிச்சையும் செய்யும். உலக நாடுகள் அனைத்தும் அலோபதி மருத்துவ முறையே சிறப்பு என்கின்றன. இதுதான் ஆங்கில மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அலோபதி சிறந்த மருத்துவம் ஆக இருக்க காரணம் எந்த மாத்திரையும் கிளினிக்கல் டெஸ்ட் செய்யபடுகிறது.
பின்பு மிருகங்களுக்கு… குரங்கு மற்றும் எலி என்று… அவைகளுக்கு கொடுத்து என்ன.. எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ச்சி செய்து… அதன் பக்க விளைவுகளையும் கண்டுபிடித்து கடைசியாகத்தான் மாத்திரை உலகிற்கு வந்து சேர்கிறது. இது சிறந்த விஞ்ஞானம்.
எல்லாம் விஞ்ஞானப்படி ஆராய்ந்து மருந்துகளைக் கொண்டு வருகிறது. இது 18,19 மற்றும் 20ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி அடைந்தது.
குறிப்பாக அம்மை, போலியோ, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாய் கடிக்கு, ரேபீஸ் நோயுக்கு தடுப்பூசி வந்தது.
சரி… அலோபதி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மாற்று மருத்துவம் பற்றிய ஞானம் யாருக்கும் இல்லை. இது ஒரு பெரிய சாபக்கேடு.
பிரிட்டிஷ், இந்தியாவில் தனது அலோபதியை திணித்தது. ஆண்டு ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஆயுர்வேதம் புறக்கணிக்கப்பட்டது. மெக்காலே எல்லா ஆயுர்வேத சாலைகளையும் தடை செய்து ஆயுர்வேதம் வளராமல் பார்த்துக்கொண்டான். இதே நிலையில்தான் தமிழ் சித்த மருத்துவமும் தடை செய்யப்பட்டது.
நம் நாட்டில் பல பல ஆண்டுகளாக ஆயுர்வேதம் செழித்து வளர்ந்தது. ஆயுர்வேதம் மூலம் அறுவைச்சிகிச்சை கூட அளிக்கப்பட்டது.
அவர்கள்... ரிஷிகள்.. அறுவை சிகிச்சை செய்ய 127 சிறு கருவிகள் கண்டுபிடித்தார்கள். பறவைகள் மற்றும் விலங்குகளின் நகம், பல், எலும்பு என 127 கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
ரிஷிகள் தாம் அறிந்ததை எழுதி வைத்து விட்டுப் போனார்கள்.
பிரிட்டிஷ் வெளியேறிய பிறகு நமது அரசு ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சி செய்ய முனைந்து இருக்க வேண்டும்.
ஆம்! ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று வரை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமும் தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்க இருக்க வேண்டும். ஆனால் யாரும் இதை செய்யவில்லை.
இப்போது ஆயுர்வேத சித்தா சிகிச்சை மையங்கள் வந்துவிட்டன. இதில் தரப்படும் மாத்திரை மற்றும் சிகிச்சை விஞ்ஞான ரீதியாக இல்லை. இதுதான் இன்றைய பிரச்சனை.
ஆயுர்வேத மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் பழம், காய், பூ, இலை (துளசி) மற்றும் பிற சாப்பாட்டு பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஆயுர்வேத மருத்துவம் இப்போது மிகவும் விலை உயர்ந்துவிட்டது. மக்கள் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம் என்பதால் ஆயுர்வேதம் நாடி செல்கின்றனர். இது தவறு. மருந்துகள் கிளினிக்கல் டெஸ்ட்டை செய்து இருக்க வேண்டும். அரசு இது பற்றி கவலைப்படுவது கிடையாது. சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் ஆயுர்வேதம் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.
சித்தா மருத்துவமும் இதே கதிதான். ஆயுர்வேத மருந்துகள் எல்லாம் விலை உயர்ந்தவை. அரசு உடனே… ஆயுர்வேத மருத்துவத்தை அலோபதி போல, கிளினிக்கல் டெஸ்ட் செய்து… பிறகு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
ஆயுர்வேதம் நமது சொத்து… !
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)