நாமே நமக்கு வைக்கும் ஆப்பு! இது தேவையா மக்களே?

Bad habits
Bad habits
Published on

அன்றாடம் மேற்கொள்ளும் செயல்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை முதலில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். நான் சரியாகத்தான் இருக்கிறேன். நான் நல்ல பழக்கங்களை மட்டும்தான் கடைபிடிக்கிறேன் என்று உங்களால் சொல்ல இயலுமா? அப்படி சொல்வது நிச்சயம் கடினம்தான். அனைவருமே தெரிந்தோ தெரியாமலோ பல தீய பழக்கங்களை மேற்கொண்டுதான் வருகிறோம்.

தீய பழக்கங்கள் என்றதும் உடனே, போதைக்கு அடிமையாவது, ஆபாச படங்கள் பார்ப்பது என சிந்திக்க தொடங்கி விட்டீர்களா? உண்மையில், தீய பழக்கங்கள் என்பது அவை மட்டுமல்ல. நம்முடைய தினசரி வாழ்க்கையில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளும் இதில் அடங்கும். சிலர் அறிந்துக் கூட இந்த தவறுகளை செய்யலாம். அப்படி என்ன தவறுகள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும்:

முதலில் நாம் செய்யும் தவறு என்னவென்றால், பசி எடுக்கும் போது சாப்பிடாமல், பசி இல்லாத போது சாப்பிடுவது. பசி இல்லாத போது சாப்பிடுவதால் உடல் நலன் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே பசி எடுக்கும் போது சாப்பிடுவது நல்லது.

காலை உணவு:

பசி இல்லாதபோது சாப்பிடுபவர்கள் ஒரு ரகம் என்றால், சாப்பிடாமல் இருப்பவர்கள் மற்றொரு ரகம். அதிகமானவர்கள் வேலைக்கு செல்லும் அவசரத்தில், காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் காலை உணவுதான் முக்கியமாக சாப்பிட வேண்டிய ஒன்று.

செல்போன் பயன்பாடு:

இன்றைய தலைமுறை, செல்போனுக்கு அடிமை என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சமூக ஊடகங்களில் மூழ்கி இருக்கின்றனர். வாரத்திற்கு ஒரு முறை உங்கள் செல்போனின் பயன்பாடு நேரத்தை செட்டிங்ஸில் பாருங்கள். அப்போதுதான் தெரியும் நீங்கள் எவ்வளவு நேரத்தை வீண் அடித்தீர்கள் என்று. இவ்வாறு  அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் செல்போன்,  நம்முடைய  மனநலன் மற்றும் உடல்நலனை பெரிதளவில் பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டா ஆபத்தா? நோட் பண்ணணுமே!
Bad habits

தூக்கம்:

தூக்கம் என்பது தினசரி நம் உடலிற்கு கொடுக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அதில்தான் அனைவரும் வஞ்சகம் செய்கின்றனர். இதனால் உடல் சோர்வு, மன சோர்வு என அனைத்திலும் பாதிப்பு அதிகமாகிறது.

உடற்பயிற்சி:

தினசரி அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. உடற்பயிற்சி செய்தால் அன்று முழுவதும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இரவு முழுவதும் சமூக ஊடகத்தில் நேரத்தை செலவிட்டு, காலையில் தாமதமாக எழுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடற்பயிற்சிக்கான நேரம் எங்கு கிடைக்கிறது. இதில் சோம்பேறித்தனம் வேறு...

இவ்வாறு நாம் தினசரி செய்யும் அலட்சியம் தான் உடலின் ஆரோக்கியத்தை பெரிதளவில் பாதிக்கிறது. சீரான ஆரோக்கியத்திற்கு தூக்கம், உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் அக்கறையாக இருப்பது அவசியமாகிறது. இதில் நாம் செய்யும் தவறுகளும் தீய பழக்கங்களே...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com