Overweight
Overweight

அதிகமாக சாப்பிடுவதால் மட்டுமல்ல, இதனாலும் உடல் எடை அதிகரிக்கலாம்… ஜாக்கிரதை! 

Published on

அதிகமா சாப்பிட்டா மட்டும்தான் உடல் எடை அதிகரிக்கும்னு நினைக்கிறீங்களா? அதுதான் தவறானது. நீங்கள் தினசரி கடைபிடிக்கும் மற்ற பழக்க வழக்கங்களினாலும் உடல் எடை அதிகரிக்கலாம். இந்தப் பதிவில் உணவுகளை விட உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் பற்றி பார்க்கலாம்.‌ 

உடல் எடையை அதிகரிக்கும் சில மோசமான பழக்கங்கள்: 

நீங்கள் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது உடல் எடை அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது குறைவாகத் தூங்குவது. போதுமான தூக்கம் இல்லாமல் போனால் உடலில் கார்ட்டிசால் எனப்படும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். இது உடலில் அதிக அளவு சர்க்கரையை சேமிக்கச் செய்து பசியை அதிகரிக்கும். இதனால், உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 

நீங்கள் தினசரி உங்கள் உடலை போதிய அளவு இயக்கவில்லை என்றாலும் உடல் எடை அதிகரிக்கும். உடல் இயக்கம் இல்லாமல் இருந்தால் கலோரிகளை எரிப்பது குறைந்து, உடலில் கொழுப்பு அதிகமாக தேங்கிவிடும். 

நீங்கள் சராசரியாக சாப்பிடும் உணவை விட செயற்கை இனிப்புகள் அதிகமாக இருக்கும் உணவை சாப்பிடுவதால், மேலும் பசி அதிகரிக்கும். இதுவும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாகும். 

மன அழுத்தம் பற்றி பெரும்பாலான நபர்கள் பேசுவதே கிடையாது. ஆனால், நீங்கள் மன அழுத்தத்துடன் இருப்பது உங்களது உடல் எடை அதிகரிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இத்துடன், நீங்கள் அதிகமாக மது குடிக்கிறீர்கள் என்றால் அதில் இருக்கும் அதிக கலோரிகள், உடல் எடையை எக்குத்தப்பாக உயர்த்திவிடும். 

தினசரி சரியான நேரத்திற்கு உணவு உண்பது மிகவும் முக்கியம். இரவில் லேட்டாக உணவு உண்பது, தூங்குவதற்கு முன் அதிகமாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள், உங்கள் உடல் எடையை மோசமாக மாற்றிவிடும். இத்துடன் நீங்கள் தினசரி போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் நீச்சத்து குறைபாடு ஏற்பட்டு பசியை அதிகமாக தூண்டிவிடும். இதனால், நீங்கள் அதிகமாக உணவு உட்கொண்டு உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
பசியால் உயிர்கள் அழுவது தெரியும்; ஆனால், உணவு உண்ணும்போது அழும் விலங்கு எது தெரியுமா?
Overweight

எனவே, நீங்கள் அதிகமாக உணவு உண்பதால் மட்டுமே உடல் எடை கூடிவிட்டதாக நினைக்க வேண்டாம். மேற்கூறிய மோசமான பழக்க வழக்கங்களினாலும் உங்களது உடல் எடை அதிகரிக்கக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். மேலே குறிப்பிட்ட பழக்கங்களை முறையாக மாற்றி அமைப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பை தடுக்கலாம். இது தவிர, உங்களது உடல் எடை அதிகரிப்புக்கு உண்மையான காரணம் என்பதை தெரிந்து கொள்ள ஒரு மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. 

logo
Kalki Online
kalkionline.com