உடல் ஆரோக்கியத்தை உடனே தலைகீழாகப் புரட்டிப்போடும் தீய பழக்கங்கள்!

Bad habits that immediately turn your health upside down
Bad habits that immediately turn your health upside down
Published on

னிதனுக்கு செல்வத்திலேயே மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியம்தான். உடலில் ஆரோக்கியம் 100 சதவிகிதம் சரியாக இருந்தால் அவனே உலகில் செல்வந்தர் என்று கூறுவார்கள். நாம் செய்யும் சிறு சிறு தவறுகள், சிறு சிறு அலட்சியங்கள் கூட நம் உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கின்றது.

சிறு வயது முதலே நாம் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருந்தால்தான் நம்மால் நிம்மதியாய் வாழ முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றினாலே நிச்சயம் நீங்கள் ஆரோக்கிய மனிதர்தான்.

1. அதிகளவு உப்புள்ள உணவுகளை உண்பது: அதிக உப்புள்ள உணவுகளான ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ், இறைச்சிகள் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பையின் சுவற்றில் அழற்சி ஏற்படுவதை அதிகரிப்பதோடு, வயிற்று புற்றுநோய் வருவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, வயிற்று புற்றுநோய் வரக்கூடாதெனில் உப்புள்ள உணவுகளை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

2. புகைப்பிடிப்பது: பொதுவாக, புகைப்பிடிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரலில் மட்டுமின்றி, இரைப்பையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இப்பழக்கம் அதிகமாக இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, உடலில் புற்றுநோய் போன்ற பலவிதமான மோசமான நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே, நீங்கள் புகைப்பிடிப்பீர்கள் என்றால், உடனே அந்தப் பழக்கத்தை கைவிடுங்கள்.

3. சர்க்கரை நிறைந்த பானங்கள்: ஸ்நாக்ஸ் சர்க்கரை இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், அது ஒரு விஷம். இந்த சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ்களை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், அது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றை மட்டுமின்றி, வயிற்று புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரித்துவிடும். எனவே இனிப்பு கலந்த உணவுகளில் கவனமாக இருங்கள்.

4. பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது: இன்றைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்களின் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, வயிறு தொடர்பான தீவிர பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ விரும்பினால், பழங்கள், காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

இதையும் படியுங்கள்:
அற்புதம் செய்யும் கற்பூரவள்ளி.. தினசரி சாப்பிட்டா?
Bad habits that immediately turn your health upside down

5. அதிகப்படியான மன அழுத்தம்: மன அழுத்தமானது ஒருவரது ஒட்டுமொத்த உடலை சீரழித்துவிடும். முக்கியமாக, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். ஏனெனில், மன அழுத்தத்தில் அதிகம் இருந்தால், அது ஜங்க் உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரித்து, அவற்றை அதிகமாக சாப்பிடத் தூண்டும். இதன் விளைவாக அந்த உணவுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, மன அழுத்தத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்ற விஷயங்களில் தினமும் ஈடுபடுங்கள்.

மேற்கண்ட விஷயங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உங்களால் உங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டியது அவசியம். சரி, இனியாவது உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ஆரோக்கியமாய் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com