இடது கையில் இந்த தழும்பு இருக்கா? பயப்படாதீங்க… அது உங்க உசுர காப்பாத்துன ஹீரோ!

நமது இடது தோள்பட்டையில் போடப்படும் காசநோய் தடுப்பூசி மட்டும் ஏன் நிரந்தரமான தழும்பை ஏற்படுத்துகிறது என்பதன் சுவாரஸ்யமான மருத்துவ விளக்கங்கள்.
Left arm injection mark facts
Left arm injection mark facts
Updated on

Left arm injection mark facts: நம்மில் பலருக்கும் இடது கையின் மேல் பகுதியில் அதாவது தோள்பட்டையில் ஒரு சிறிய வட்டமான தழும்பு இருப்பதை நீங்கள் கட்டாயம் கவனித்திருப்பீர்கள். நமது பெற்றோர்கள் கூட இந்த தழும்பை பார்த்து இது தடுப்பூசி போட்டதற்கான அடையாளம் என்று சாதாரணமாக சொல்வார்கள். வாழ்க்கையில் எத்தனையோ முறை காய்ச்சல், தலைவலி என்று மருத்துவமனைக்குச் சென்று பல ஊசிகளைப் போட்டிருப்போம். 

ஆனால் அந்த ஊசிகள் எதுவும் இப்படி ஒரு நிரந்தரமான தழும்பை நமது உடலில் ஏற்படுத்துவதில்லை. அந்த குறிப்பிட்ட ஒரு தடுப்பூசி மட்டும் ஏன் இப்படி ஆறாத வடுவாக மாறுகிறது என்று பலருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருக்கும். இது ஏதோ மருத்துவர் செய்த தவறு என்றோ அல்லது அலர்ஜி என்றோ சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் ஒரு அட்டகாசமான அறிவியல் உண்மை ஒளிந்திருக்கிறது. 

BCG மற்றும் பெரியம்மை தடுப்பூசி!

பொதுவாக குழந்தை பிறந்த உடனே மருத்துவமனையில் பல்வேறு தடுப்பூசிகள் போடப்படும். அதில் மிக முக்கியமானது காசநோய் எனப்படும் டியூபர்குளோசிஸ் (Tuberculosis) நோயை தடுப்பதற்காகப் போடப்படும் பிசிஜி (BCG - Bacillus Calmette-Guerin) தடுப்பூசி. இந்த ஊசி தான் நமது கையில் நிரந்தரமான தழும்பை உருவாக்குகிறது. 

அதேபோல நமது முந்தைய தலைமுறையினருக்குப் பெரியம்மை எனப்படும் ஸ்மால்பாக்ஸ் (Smallpox) நோய்க்காகப் போடப்பட்ட ஊசியும் இதே போன்றதொரு தழும்பை அவர்கள் கைகளில் உருவாக்கியிருக்கும். இது கொடிய நோய்களில் இருந்து மனித குலத்தை காப்பாற்றிய மாபெரும் மருத்துவ கண்டுபிடிப்பாகும்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் உங்களை செவிடாக்குமா?
Left arm injection mark facts

தழும்பு உருவாவதன் காரணம்!

நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் அல்லது காய்ச்சல் ஊசிகள் அனைத்தும் நமது தோலைத் தாண்டி உள்ளே இருக்கும் தசைகளுக்குள் மிக ஆழமாக செலுத்தப்படும். அதனால் தான் அவை எந்த வடுவையும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் இந்த BCG தடுப்பூசியானது தோலின் மிக மேல் அடுக்கான Dermis என்ற பகுதிக்குள் மட்டுமே மிக கவனமாகச் செலுத்தப்படும். இது மிகவும் மேலோட்டமாகச் செலுத்தப்படுவதால், மருந்து உள்ளே சென்றவுடன் அந்த இடத்தில் ஒரு சிறிய நீர்க்குமிழி போன்ற அமைப்பு உடனடியாக உருவாகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு போராட்டம்!

ஊசி போட்ட பிறகு ஆறு முதல் எட்டு வாரங்களில் அந்த நீர்க்குமிழி படிப்படியாக பெரிதாகி உள்ளே சீழ் வைத்து ஒரு சிறிய புண்ணாக மாறிவிடும். இதைப் பார்க்கும் பல பெற்றோர்கள் ஊசி போட்ட இடத்தில் இன்பெக்ஷன் ஆகிவிட்டதோ என்று மிகவும் பயப்படுவார்கள். ஆனால் மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அந்தப் புண் உருவாகுவது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த மருந்துக்கு மிகச் சிறப்பாகப் பதிலளிக்கிறது என்பதைத் தெளிவாக காட்டுகிறது. 

இதையும் படியுங்கள்:
கொசுவை கொல்ல கொசுவே ஆயுதம்..! அமெரிக்காவில் 3 கோடி கொசுக்களை பறக்கவிடும் கூகுள்..!
Left arm injection mark facts

அதாவது, ஒரு நோய்க்கிருமிக்கு எதிராக நமது உடலின் எதிர்ப்பு அணுக்கள் எவ்வாறு பயிற்சி எடுக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. சில வாரங்களில் அந்தப் புண் தானாகவே காய்ந்து, கொப்புளமாக மாறி உதிர்ந்துவிடும். அந்த இடம் உள்நோக்கி சுருங்கி ஒரு நிரந்தரமான தழும்பாக மாறிவிடும்.

உங்கள் கையில் இருக்கும் அந்த சிறிய தழும்பு எந்த ஒரு பக்கவிளைவும் கிடையாது. நமது வாழ்நாள் முழுவதும் காசநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த சிறிய மருந்து நம் தோலுக்குள் பெரிய அற்புதத்தை செய்கிறது.

logo
Kalki Online
kalkionline.com