தொப்புளில் இந்த 5 எண்ணெய்களை வைத்தால் நடக்கும் மேஜிக்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

applying oil in belly button
applying oil in belly button
Published on

நமது பாட்டி தாத்தா காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் நம் வீடுகளில் வழக்கத்தில் உள்ளது. தொப்புள் என்பது வெறும் ஒரு சாதாரண தழும்பு கிடையாது, அது நமது உடலின் நரம்புகளோடு தொடர்புடைய ஒரு முக்கியமான மையப் பகுதி. அந்த இடத்தில் உள்ள சருமம் மிகவும் மெல்லியதாக இருப்பதால், நாம் தடவும் ஈரப்பதத்தை அது மிக எளிதாக உறிஞ்சி உடலுக்கு ஒருவிதமான ரிலாக்ஸை கொடுக்கிறது. 

இது எந்த ஒரு பெரிய நோயையும் ஒரே இரவில் குணமாக்கும் மருத்துவ சிகிச்சை கிடையாது. இருந்தாலும், உடலை அமைதியாகவும் சருமத்தை ஆரோக்கியமாகவும் மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு சூப்பரான இயற்கையான டெக்னிக் ஆகும். எந்தெந்த எண்ணெய்களை தொப்புளில் பயன்படுத்தினால் என்னென்ன ஸ்பெஷல் நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

பயன்படுத்த வேண்டிய 5 எண்ணெய்கள்!

1. விளக்கெண்ணெய்: இது ரொம்பவே அடர்த்தியான ஒரு எண்ணெய். தொப்புளை சுற்றியுள்ள பகுதி மிகவும் வறண்டு போய் இருப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். இரவு தூங்குவதற்கு முன்பு இதில் இரண்டு சொட்டு வைத்தால், அது சருமத்தை ரொம்பவே சாஃப்ட்டாக மாற்றுவதோடு உடலுக்கு ஒரு மிதமான இதமான வெப்பத்தையும் கொடுக்கும். செக்கில் ஆட்டிய சுத்தமான விளக்கெண்ணெய் இதற்கு மிகச் சிறந்த சாய்ஸ்.

2. தேங்காய் எண்ணெய்: எந்த விதமான சருமம் உள்ளவர்களுக்கும் இது பக்காவாக செட் ஆகும். இறுக்கமான உடைகளை அணிவதால் அல்லது அதிக வியர்வையால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை இது உடனடியாக சரிசெய்துவிடும். ரொம்பவே லைட்டான தன்மையை கொண்ட இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துவது நமது உடலுக்கு ரொம்பவே நல்லது. இதன் மென்மையான வாசம் நமக்கு ஒரு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

3. நல்லெண்ணெய்: குளிர்காலங்களில் பயன்படுத்துவதற்கு இது ஒரு அருமையான தேர்வு. இது இயற்கையாகவே உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது. இதை லேசாக சூடு செய்து தொப்புளில் தடவும் போது, அந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் சீராகி தசை பிடிப்புகள் நீங்கி உடல் ரொம்பவே ரிலாக்ஸ் ஆகும்.

இதையும் படியுங்கள்:
புரதச் சத்து மிக்க தானியம் இல்லாத மொலாசஸ் பாதாம் குக்கீஸ் செய்யலாமா?
applying oil in belly button

4. பாதாம் எண்ணெய்: வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் உள்ள இந்த எண்ணெய் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம். இதை தொடர்ந்து தொப்புளில் வைத்து வந்தால், அந்த பகுதியில் உள்ள அரிப்புகள் நீங்குவதோடு பழைய ஸ்ட்ரெட்ச் மார்க் தழும்புகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும். இது சருமத்திற்கு நல்ல ஒரு பளபளப்பை கொடுக்கும்.

5. கடுகு எண்ணெய்: இது ரொம்பவே ஸ்ட்ராங்கான மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு அதிக சூட்டை தரக்கூடிய ஒரு எண்ணெய் ஆகும். இதை தினமும் பயன்படுத்தக் கூடாது. இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்களுக்கு இது செட் ஆகுமா என்பதை கைகளில் தடவி பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது மிக அவசியம். தேவைப்பட்டால் இதை வேறு ஏதேனும் மென்மையான எண்ணெயோடு கலந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எண்ணெய் வைப்பதற்கு முன்பாக தொப்புளை சுத்தமாக கழுவி துடைக்க வேண்டியது மிக மிக முக்கியம். அழுக்கோடு சேர்த்து எண்ணெயை வைத்தால் அங்கு தேவையில்லாத பாக்டீரியாக்கள் சேர்ந்துவிடும். அதே போல, எண்ணெயை வண்டி வண்டியாக ஊற்றாமல் வெறும் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் வைப்பதே போதுமானது. அதிக எண்ணெய் விட்டால் அதிக பலன் கிடைக்கும் என்று நினைப்பது ரொம்பவே தவறான விஷயம். 

இதையும் படியுங்கள்:
சாக்கு போக்கு சொல்வதால் ஏதேனும் இழப்பு ஏற்படுமா?
applying oil in belly button

ஏதேனும் எரிச்சலோ அல்லது சிவந்து போவதோ தெரிந்தால் உடனே இதை செய்வதை நிறுத்திவிட வேண்டும். இது வெறும் ஒரு பாரம்பரியமான பராமரிப்பு முறை மட்டுமே, மருத்துவ சிகிச்சைக்கு இது எந்த வகையிலும் மாற்று கிடையாது. உங்களுக்கு ஏற்கனவே ஏதாவது சருமப் பிரச்சனை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு இதை செய்வது ரொம்பவே பாதுகாப்பானது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com