
தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இது உணவில் சுவை சேர்க்கவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
* தினமும் ஒரு பூண்டு பல்லை உணவில் சேர்த்து வந்தாலே சாதாரண சளியில் இருந்து கொலஸ்ட்ரால் வரை குணமாக்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதன் வாசனை வேண்டும் என்றால் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இதில் மறைந்துள்ள பயன்களை தெரிந்தால் யாரும் இதை ஒதுக்க மாட்டார்கள்.
* பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும். இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. பூண்டு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
* பச்சை பூண்டிற்கு இயற்கையாகவே அல்லிசின், ஆக்சிஜனேற்றம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் பி6 போன்ற கலவைகளுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றம் உள்ளது.
* பூண்டை பச்சையாக சாப்பிடும் போது அவை கல்லீரல் நொதிகளைத் தூண்டி, உயிர்ச்சக்தியை ஊக்குவிப்பதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது.
* பச்சை பூண்டு நன்மை செய்யும் குடல் பாக்டீரியாவை ஆதரிப்பதன் மூலமும், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமும் செரிமானத்திற்கு உதவுகிறது.
* அதுமட்டுமின்றி பச்சை பூண்டின் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட வலி அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
* சரும அழற்சியைத் தடுக்கவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கவும் பச்சை பூண்டு உதவும்.
* பூண்டில் இயற்கையாகவே உள்ள சேர்மங்கள் புற்றுநோய் செல்களை கண்டறிந்து கொல்கின்றன. மேலும் புற்றுநோயை வளர விடாமல் தடுக்கிறது. பச்சை பூண்டு வயிறு, தொண்டை, புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* பச்சை பூண்டு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அதாவது இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் நிர்வாகத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
* பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதாவது இது முகப்பரு, பூஞ்சை மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் சருமத்தை மேம்படுத்துகிறது.
* பச்சை பூண்டை சாப்பிடும் போது ஏதாவது அலர்ஜி அல்லது உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட்டு மருந்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். அல்லது பச்சை பூண்டை சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பு உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.