நெல்லிக்காய் ஜூஸ் + மிளகு தூள் - மேஜிக் செய்யும் இயற்கை மருத்துவ காம்போ!

நெல்லிக்காய் ஜூசுடன் சிறிது கருப்பு மிளகுப் பொடி சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது இயற்கையான வைத்தியமாகும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாறுhttps://tamil.webdunia.com
Published on

நெல்லிக்காய் ஜூசுடன் சிறிது கருப்பு மிளகுப் பொடி சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது இயற்கையான வைத்தியமாகும். இது நோயெதிர்ப்பு, ஹார்மோன்களை சமப்படுத்துதல் மற்றும் உடல் கழிவுகளை நீக்கும். இதனால் ஏற்படும் ஏழு நன்மைகளைப் பார்ப்போம்.

மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை அதிகரிக்கும்

நெல்லிக்காயின் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக வைக்கும். கருப்பு மிளகு இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி மூளையை கூர்மையாக வைக்கும்.

ஹார்மோன் சமச்சீர்

ஹார்மோன்களின் சமச்சீரின்மை காரணமாக எடை அதிகரிப்பு மற்றும் தாறுமாறான மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நெல்லிக்காய் தைராய்டு சுரப்பியை சீராக்கி மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்துகிறது. மிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஹார்மோன்களை சீராக செயல்பட வைக்கிறது.

நச்சுக்களை நீக்குகிறது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது சுற்றுச்சூழலில் பாதிப்பால் நம் உடலில் கனமான உலோகங்கள் சேருகின்றன. நெல்லிக்காய் இத்தகைய நச்சு உலோகங்களை நீக்க உதவுகின்றன. நம் வயிற்றை நன்கு சுத்தமாக்குகிறது.

உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும் இரும்புச் சத்தை அதிகமாக்குகிறது

நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி உள்ளதால் இரும்புச்சத்தை நன்கு உறிஞ்சி செரிமானத்தை சீராக்குகிறது. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைப்பதால் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கிறது

நெல்லிக்காயில் மனஅழுத்தத்தைக் போக்கக் கூடிய பண்புகள் உள்ளன. அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசாலை குறைக்கிறது. கருப்பு மிளகு மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களான டோபமைன் மற்றும் செரடோனின் ஆகியவற்றைத் தூண்டி மனச்சோர்வை நீக்கி மனஅமைதியை அளிக்கிறது.

வாய் ஆரோக்கியம்

இந்த பானம் வாய் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. நெல்லிக் காயில் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் உள்ளதால் ஈறுகளின் தொற்றை நீக்கி காக்கிறது. பல் வலியை கருப்பு மிளகு கட்டுப்படுத்துகிறது. வாய்க்கு நறுமணத்தைத் தருகிறது.

கண் ஆரோக்கியம்

கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் பார்வை கோளாறுகளை நீக்குகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் ஏ மற்றும் கரோடினாய்டுகள் உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்குகிறது. கருப்பு மிளகில் கண் பிரச்னைகளை குணமாக்கக்கூடிய இயற்கை கூறுகள் உள்ளதால் கண் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்கும் உதவும் நெல்லிக்காய்!
நெல்லிக்காய் சாறு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com