தினசரி ஓட்ஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

Benefits of eating oats daily.
Benefits of eating oats daily.
Published on

ஓட்ஸ் ஒரு முழு தானிய உணவு வகை. இதில் பீட்டா குளூக்கன் நார்ச்சத்து, இரும்பு மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பல நூறு ஆண்டுகளாகவே உணவாக உட்கொள்ளப்பட்டு வரும் ஓட்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் இதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக மக்களால் அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இந்தப் பதிவில் தினசரி ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினசரி ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் மூலமாக உங்களது ரத்த சர்க்கரை அளவு சீராகி பசி மற்றும் உணவு ஆசைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. 

ஓட்ஸில் உள்ள பீட்டா குளூக்கன் LDL கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் இதனால் சீராக்கப்பட்டு இதய நோய்க்கான அபாயம் குறைகிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி ஓட்ஸ் சாப்பிடுங்கள். 

ஓட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பீட்டா குளூக்கள் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் இதனால் தடுக்கப்படுகிறது. மேலும், இதில் நிறைந்து காணப்படும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கவும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக மேம்படுத்தவும் உதவுகிறது. 

ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளைக் கொண்ட ஓட்ஸ் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்தவும், முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

தினசரி ஓட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது தொற்று நோய்களுக்கு எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. 

இதையும் படியுங்கள்:
அடிக்கடி வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்படுகிறதா? வைட்டமின் பி6 குறைபாடாக இருக்கலாம்; ஜாக்கிரதை!
Benefits of eating oats daily.

ஓட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு நாள் முழுவதும் நிலையான ஆற்றலை வழங்குகிறது. இதை காலை உணவாக சாப்பிடும்போது, அன்றைய நாள் முழுவதும் நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் புத்துணர்ச்சியாக இருக்க உதவும். 

ஓட்ஸில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. ஓட்ஸ் உடலில் மகிழ்ச்சி ஹார்மோனான ‘செரட்டோனின்’ உற்பத்தியை அதிகரித்து நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். 

இப்படி ஓட்ஸ் சாப்பிடுவதால் எண்ணிலடங்காத ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் தினசரி காலையில் ஓட்ஸ் உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதை உணவாக உட்கொள்வது பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகுந்த மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com