விடியற்காலையில் முளைக்கட்டிய பயறு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

sprouted lentils
Benefits of eating sprouted lentils in the morning!
Published on

விடியற்காலையில் நாம் எழுந்ததும் உண்ணும் உணவு அன்றைய நாளின் ஆற்றலுக்கும், உடல் நலத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. பல காலமாகவே மக்கள் தங்கள் உணவில் முளைகட்டிய பயறுகளை சேர்த்து வருகின்றனர். இவை வெறும் உணவு மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை தடுத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத பொக்கிஷமாகும். இந்தப் பதிவில் விடியற்காலையில் முளைக்கட்டையை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

முளைக்கட்டிய பயறுகளின் சிறப்பம்சங்கள்: 

முளைக்கட்டிய பயறுகள் சாதாரண பயறுகளை விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. முளைக்கும் போது பயறுகளில் உள்ள புரதம், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் நாச்சத்து ஆகியவை குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் முளைக்கட்டிய பயறுகளில் நிறைந்துள்ளன.‌

முளைக்கட்டிய பயறுகளால் கிடைக்கும் நன்மைகள்: 

முளைகட்டிய பயறுகளில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும், இவை நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதிக நார்ச்சத்து காரணமாக கொலஸ்ட்ரால் அளவு குறைந்து ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. 

முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. மேலும், இவற்றில் குறைந்த கலோரி இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து எடை இழப்புக்கு உதவும்.‌ 

இதில் நிறைந்து காணப்படும்  சருமத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின்களும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நம்மை என்றும் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்கள் எலும்புகளை வலுப்படுத்தி, எலும்பு முறிவுகள், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
பச்சை மிளகாயில் காரம் மட்டுமல்ல; பயன் தரும் நன்மைகளும் உண்டு!
sprouted lentils

உணவில் எவ்வளவு சேர்க்கலாம்? 

முளைக்கட்டிய பயறுகளை பச்சையாக அப்படியே சாப்பிடலாம் அல்லது அவற்றை வதைக்கி சூப்களில் சேர்த்தும் பருகலாம். தினசரி 50 கிராம் இவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அதிகபட்ச நன்மைகளை நீங்கள் பெற முடியும். 

விடியற்காலையில் முளைகட்டிய பயிர் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். இது நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கி, பல நோய்களைத் தடுத்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. எனவே, இன்று முதல் உங்கள் உணவில் முளைகட்டிய பயறுகளை சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com