கோரைப்பாயில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள்!

Benefits of Sleeping on Krai Pai
Benefits of Sleeping on Krai Pai

ன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே சொகுசு வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம். இதனால் நம்மிடமிருந்த அந்தக் கால பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. என்னதான் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மறுபுறம் நோய்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் நமது முன்னோர்கள் கண்டறிந்த பல அற்புதமான விஷயங்களை நாம் மறந்து விடுகிறோம். அதில் ஒன்றுதான் கோரைப் பாயில் படுத்து உறங்குவது.

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறதாம். இதனாலேயே நம் முன்னோர்கள் 'பாயில் படு, நோயை விடு' என்ற பழமொழியைக் கூறியுள்ளனர்.

பொதுவாகவே, பாய் வகைகளில் ஈச்சம் பாய், கோரைப் பாய், மூங்கில் பாய் என பலவகை உண்டு. இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உடையதாகும். குறிப்பாக, பாய்க்கு உடல் சூட்டை உள்வாங்கும் தன்மை உள்ளதால், அது நமக்கு ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.

உடல் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்பவர்கள் பாயில் கொஞ்ச நேரம் படுத்து எழுந்தால் அவர்களின் சோர்வு நீங்குவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்கினால், அவர்களுக்கு முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்னைகள் வராது. பிறந்த குழந்தையை பாயில் படுக்க வைப்பதனால் அவர்களுக்கு சுளுக்கு பிடிக்காது. இது குழந்தையின் முதுகெலும்பை சீர்படுத்தி, அவை வேகமாக வளர வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நலம் பயக்கும் நல்ல கொழுப்பின் அவசியம்!
Benefits of Sleeping on Krai Pai

இப்போதெல்லாம் சிலருக்கு இளம் வயதிலேயே கூன் விழுவதைப் பார்த்திருப்போம். இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பாயில் தொடர்ந்து உறங்கி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயதானவர்கள் பாயில் படுத்து உறங்குவது நல்லது. ஏனெனில், முதுமை காலத்தில் உடலில் இரத்த ஓட்ட பிரச்னை இருக்கும். அந்த சமயங்களில் பாயில் சமமாகப் படுக்கும்போது உடலுக்கு இரத்தம் சீராகப் பாய்கிறது. எனவே, நீங்கள் கட்டிலில் படுக்கும் பழக்கம் கொண்டிருந்தாலும் அதன் மேல் பாய் போட்டு படுங்கள்.

சராசரியாக நாம் வாங்கும் பாயை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தரம் குறைந்துவிடும் என்பதால், அதன் பிறகு புதிய பாய் வாங்குவது நல்லது. இன்றளவும் கல்யாணத்தில் சீர்வரிசை கொடுக்கும்போது கட்டிலோடு பாயும் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பரியம் வாய்ந்த பாய் நம் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com