
நாம் தினமும் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களான ஷாம்பூ, அழகு சாதனங்கள், சோப்புகள் மற்றும் டியோடரண்டுகளில் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் கீழ்க்கண்ட கெமிக்கல்கள் இருந்தால் அதைத் தவிர்க்கவும்.
1. அலுமினியம்
இது மார்பு புற்று நோயை உண்டாக்கலாம். இது நம் எண்டோக்ரைன் சிஸ்டத்தை பாதிக்கும். அனேகமாக இவை எல்லா டியோடரண்டுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
2. Benzalkonium chloride
அனேகமாக இது முகசோப்புகள், மற்றும் அழகு சாதனங்களிலும் இடம் பெற்றிருக்கும். இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கொண்டதால், எல்லா பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம் சருமம் மற்றும் கண்கள் பகுதியில் அரிப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு அலர்ஜி பிரச்னை இருந்தால், இந்த ரசாயனம் கலந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது நம்மை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடியது.
3. பாரா பென்ஸ்
2017 ன் ஆராய்ச்சியின்படி இந்த பாராபென்கள் ப்ராஸ்டேட்டை பாதிக்கக்கூடியது என்று அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் ஷாம்பூ, டூத் பேஸ்ட், சுத்தப்படுத்தும் க்ளீனர்கள் மற்றும் டியோடரண்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை இனப்பெருக்க உறுப்பை பாதித்து எண்டோக்ரைன் சிஸ்டத்தையும் பாதிக்கும்; புற்றுநோய் மற்றும் சரும பாதிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.
4. ஃபார்மல்டீஹைடு
சரும பராமரிப்பு பொருட்களில் இது பெரும்பாலும் சேர்க்கப் படுகிறது. நெயில் பாலிஷ், ஷாம்பூ மற்றும் அழகு சாதனங்களில் சேர்க்கப்படுகிறது. முடி எரிச்சல், முடி உதிர்தல் மற்றும் ஆஸ்த்மா பிரச்னைகளை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இது வீட்டுச் சூழலின் காற்றையும் பாதிக்கிறது.
5. ஆக்சிபென்சோன்
சூரிய ஒளியின் அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சுகளிலிருந்து நம்மைக் காக்க நாம் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துகிறோம். ஆக்சிபென்சோன் பெரும்பாலான சன்ஸ்க்ரீன்களில் காணப்படுகிறதாம். இந்த கெமிகல் கலந்த சன் ஸ்க்ரீன் நமக்கு பாதுகாப்பு தருவதற்கும் பதிலாக கெடுதலையே தரும். இந்த கெமிகல் எண்டோக்ரைன் சிஸ்டத்தை பாதிக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)