Nose
Nose

உங்கள் மூக்கில் இந்த 5 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை!

Published on

நாம் சுவாசிக்கவும் வாசனையை உணரவும் பயன்படும் மூக்கு நம் உடலின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். ஆனால், இது வெறும் ஒரு உடல் பாகம் என்பதையும் தாண்டி நம் உடல் நிலையை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி போன்றது. மூக்கில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து நம் உடலில் உள்ள நோய்களை நாம் கண்டறிய முடியும். அந்த வகையில் இந்தப் பதிவில் மூக்கின் ஆரோக்கியத்திற்கும் நம் உடல் நிலைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

1. தொடர்ச்சியான மூக்கடைப்பு: உங்களுக்கு நீண்ட காலமாக மூக்கடைப்பு இருக்கிறது என்றால் அது குளிர் அல்லது ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். ஆனால், சில சமயங்களில் சைனஸ் தொற்று காரணமாகவும் இத்தகைய அறிகுறிகள் உண்டாகும். மேலும், நாசிப் பகுதியில் சதை வளர்ச்சி அல்லது வளைவுகளால் மூக்கடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

2. அதிகப்படியான சளி: குளிர்காலத்தில் சளி ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், சில சிலருக்கு நாசிப்பகுதியில் ஏற்படும் தொற்றுகள் காரணமாகவும் இத்தகைய அறிகுறி உண்டாகும். 

3. மூக்கில் ரத்தம் வடிதல்: சாதாரணமாக காயம் ஏற்பட்டால் மூக்கில் ரத்தம் வருவது சகஜம். ஆனால் உயர் ரத்த அழுத்தம் காரணமாகவோ, மூக்கின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனை அல்லது நாசி புற்றுநோய் போன்ற தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாக அது இருக்கும். எனவே, எதையும் நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
வேர்க்கடலை சாப்பிட்டால் யாருக்கெல்லாம் அலர்ஜி ஏற்படும் தெரியுமா?
Nose

4. மூக்கில் அரிப்பு: மூக்கில் அரிப்பு ஏற்படுவது அலர்ஜி காரணமாக உண்டாக்கலாம். ஆனால் சிலருக்கு சரும நோய்கள், மூக்கில் ஏற்படும், தொற்றுகள் போன்றவற்றாலும் இத்தகைய அரிப்பு உண்டாகும். 

5. வாசனை உணர முடியாமை: மூக்கடைப்பு ஏற்பட்டால் தற்காலிகமாக வாசனை உணர முடியாமல் போகும் நிலை ஏற்படலாம். ஆனால், சிலருக்கு மூக்கில் நரம்பு மண்டல பிரச்சனை, மூளை சார்ந்த நோய்கள் போன்ற பிரச்சினைகளால் இந்த நிலை உண்டாகும். 

6. மூக்கு வறட்சி: நீங்கள் அதிகமாக ஏசியில் இருக்கும் நபராக இருந்தாலோ, வறண்ட கால நிலையிலோ மூக்கு வறட்சி ஏற்படும். ஆனால் மூக்கு வறட்சி, சில மருந்துகளின் பக்க விளைவாக இருக்கலாம். எனவே, நீங்கள் ஏதேனும் தொடர் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால், அதனால் மூக்கு வறட்சி ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு மூக்கு குத்துவதன் காரணம் தெரியுமா?
Nose

இவ்வாறு மூக்கு நம் உடலில் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும் அது நம்முடைய உடல்நிலை பற்றி பல தகவல்களை வெளிப்படுத்தும். உங்களுக்கு மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 

logo
Kalki Online
kalkionline.com