பாகலுக்கு மரியாதை: கசப்புக்குள் ஒளிந்திருக்கும் இனிப்பான விஷயங்கள்!

ஆரோக்கியம் அளிக்கும் காய்களில் நோய்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கும் ஒரு காய் எதுவென்றால் அது தான் பாகற்காய்.
பாகற்காய்
பாகற்காய்https://www.herzindagi.com
Published on

கடவுள் நமக்கு எத்தனையோ விதமான காய்களை தந்துள்ளார். ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. மூளைக்கு வெண்டை; இதயத்திற்கு தக்காளி; நரம்புக்கு கொத்தவரை என்று சொல்லிக்கொண்டு போகலாம். இப்படி ஆரோக்கியம் அளிக்கும் காய்களில் பிரதானமாக, நோய்களை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கும் ஒரு காய் எதுவென்றால் அது தான் பாகற்காய்.

பாகற்காயின் நற்குணங்களை எண்ணுவதற்கு பத்து விரல்கள் போதாது. கசப்பு என்று பாகற்காயின் மீது வெறுப்பு காட்டுபவர்கள் அதை பற்றி படித்தோ கேட்டோ உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும். பாகற்காயின் கசப்புக்குள் பல இனிப்பான விஷயங்கள் உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வீடுகளின் பின்புற தோட்டங்களில் பாகல் கொடிகள் இல்லாமல் இருக்கவே இருக்காது.பாகற்காய்கள் பந்தலில் இருந்து தொங்கும் அழகே அழகு.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் பாகற்காய்: கசப்பே தெரியாமல் சமைக்க, இதோ ஒரு சுலபமான வழி!
பாகற்காய்

பாகற்காய்க்கு தனி சீசன் என்று ஒன்றும் கிடையாது. கத்திரி, வெண்டை போல அதுவும் எல்லா நாட்களிலும் காய்க்கும் ஓர் காயாகும்.

பாகற்காய்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சிறியதாக இருக்கும். இதை குருவி தலை காய் என்று அழைப்பர். இன்னொன்று கொம்பு பாகற்காய் என்று அழைக்கப்படுகிறது.

பாகற்காய் பார்த்திருக்கிறீர்கள். சாப்பிட்டும் இருப்பீர்கள். ஆனால் உங்களில் எத்தனை பேர் பாகல் பழங்களை பார்த்திருக்கிறீர்கள். பாகற்காய் பந்தல்களில் செக்கச்செவேலென்று பழங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கி கொண்டிருக்கும்.

அது, இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு விதமான சுவை. அந்தநாளில் நீரிழிவு நோய் தலை காட்டாமல் இருந்ததற்கு பாகற்காயை வாரம் ஒரு முறையாவது உண்ணும் வழக்கமும் ஒரு காரணம் ஆகும்.

பாகற்காயில் அதிக அளவு இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வயிற்று புழுக்களை அழித்து செரிமானத்தை ஊக்குவிக்கும் காய் இந்த கசப்பு காய். கொழுப்பை குறைத்து இதய நாளங்களில் அடைப்புகள் வராமல் தடுக்கிறது.

கல்லீரலில் சேரும் நச்சு தன்மையை அறவே அகற்றுகிறது இந்த பாகற்காய். தன் தோல் சொர சொர வென்று இருந்தாலும் தன்னை உட்கொள்வோரின் சருமத்தை மழ மழ வென்று வைத்துக்கொள்கிறது பாகற்காய். எல்லாவற்றிற்கும் மேலாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் பாகற்காயிற்கு இணை பாகற்காய்தான்.

இதையும் படியுங்கள்:
Bitter Gourd | இவர்கள் எல்லாம் பாகற்காய் சாப்பிடக்கூடாதாம்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
பாகற்காய்

பாகற்காய் செடியை மொட்டை மாடியில் வளர்க்கலாம். புடலையும் சேர்த்து வளர்த்தால் ஒரு பக்கம் எலி குஞ்சுகள் போல பாகற்காய்கள் தொங்கும். மறுபுறம் பாம்புகள் போல புடலங்காய்கள் தொங்கும்.

நல்ல அறிவுரைகள் கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் நமக்கு நன்மை அளிக்கும் இல்லையா? அதே போல் தான் சாப்பிட கசப்பாக இருந்தாலும், பாகற்காய் நம் உடலுக்கு நன்மை அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com