இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு உணவுத் திட்டங்கள், உடற்பயிற்சிகள் என பல வழிகள் இருந்தாலும், எளிமையான, ஆரோக்கியமான, நீண்ட காலத்திற்கு பலன் தரும் தீர்வுகள் சிறப்பானவை. இத்தகைய வழிகளில் கருப்பு பீன்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கருப்பு பீன்ஸ் சாப்பிடுவது நல்லது. இந்தப் பதிவில் கருப்பு பீன்ஸ் உடல் எடையைக் குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
கருப்பு பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்த உணவு. நார்ச்சத்து நிறைந்த உணவு செரிமானம் செய்யும் நேரத்தை அதிகரித்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இதனால், அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மேலும், நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
கருப்பு பீன்ஸ் தாவர அடுப்பிடையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். புரதம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, தசை வளர்ச்சிக்கும் உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
கருப்பு பீன்ஸில் கலோரி குறைவாகவும் இரும்பு, பொட்டாசியம், மக்னிசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. இவை உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் பயணத்தை எளிதாக்குகின்றன. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால், இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
கருப்பு பின்ஸ் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இதை பல்வேறு வகையான உணவுகளில் சேர்த்து சாப்பிடுங்கள். சூப், சாலட், டாக்கோஸ்ட், பீன்ஸ், பொரியல், சுண்டல் என பல வழிகளில் இதை உணவாக உட்கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கும் இந்த அற்புதமான உணவில் நார்ச்சத்து, புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது உடல் எடையை குறைப்பதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இருப்பினும், உடல் எடையைக் குறைப்பதற்கு கருப்பு பீன்ஸ் மட்டும் போதுமானது அல்ல. இத்துடன் சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி இணைந்த ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம்.