வருடத்திற்கு ஒரு முறை அவசியம் செய்ய வேண்டிய 8 ரத்த பரிசோதனைகள்

Blood test
Blood test
Published on

மருத்துவ பரிசோதனைகள் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் நோய்களையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற உதவி புரிகின்றன. ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் வாழ வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை இன்றியமையாதது. அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டிய ரத்தப் பரிசோதனைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. CBC Test

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள், ஹீமோகுளோபின் அளவு போன்ற அனைத்து அம்சங்களையும் இந்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதனால் ரத்த சோகை, தொற்று நோய்கள், அலர்ஜி, ரத்தம் உறைதல், ரத்தப் புற்றுநோய்கள் போன்ற நோய்களை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும்.

2. HbA1c -Test

HbA1C மூன்று மாதங்களில் இரத்த சராசரி சர்க்கரை அளவை மதிப்பிடும் பரிசோதனை ஆகும். நீரிழிவு நோயாளிகள் இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது ப்ரீ டயாபடீஸ் இருப்பவர்கள் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவால் சிறுநீரக செயலிழப்பு, கால் நரம்புகள் பாதிப்பு, கண் பார்வை இழப்பு உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. Lipid Profile - Test

உடலில் இருக்கும் கொழுப்புகளின் அளவை மதிப்பிட இந்த பரிசோதனை மிகவும் அவசியம். மொத்த கொழுப்பு, உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் (HDL - நல்ல கொழுப்பு) குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் (LDL - கெட்ட கொழுப்பு) மற்றும் டிரைகிளிசரைடுகள் ஆகியவை இந்த பரிசோதனையில் மதிப்பிடப்படுகின்றன. இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குடும்பத்தில் ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

4. Renal Function Test

இரத்தத்தில் உள்ள கிரியேட்டின் மற்றும் ரத்த யூரியா நைட்ரஜன், எலக்ட்ரோலைட்டுகள் (சோடியம், பொட்டாசியம், குளோரைடுகள்) போன்ற அளவுகள் இந்த பரிசோதனையில் கணக்கிடப்படும். சிறுநீரகம் சரியாக செயல்படுகின்றதா? என்பதை கண்டறிய இந்த பரிசோதனை மிகவும் முக்கியம் என்பதால் இந்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

5. Liver function Test

உடலின் ராஜ உறுப்பான கல்லீரல் செயல்பாட்டை தெரிந்து கொள்ள உதவும் LFT பரிசோதனையின் மூலம் இரத்தத்தில் உள்ள என்சைம்களான ALT, AST, பிலுருபின், அல்புமின் போன்ற அளவுகளை கணக்கிட முடியும்.இதனால் கல்லீரல் அலர்ஜி, கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிந்து குணப்படுத்த உதவிகரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க... கதைகள் சொல்லுங்க சார்!
Blood test

6. Thyroid-Test

தைராய்டு சுரப்பி குறைவாக செயல்படுதல் அல்லது அதிகமாக செயல்படுதல் போன்ற பிரச்சனைகளை தெரிந்து கொள்ள தைராய்டு தூண்டுதல் ஹார்மோன், டி3 மற்றும் டி4 ஹார்மோன்களின் அளவுகள் இப்பரிசோதனையில் செய்யப்படுகின்றன. இதனால் உடல் எடை மாற்றங்கள், சோர்வு, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

7. Vitamin D-Test

வைட்டமின் டி பரிசோதனையின் மூலம் ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் எலும்பு பலவீனத்தை உண்டாக்கும் வைட்டமின் டி குறைபாட்டை அறிந்து கொள்ள முடியும். சூரிய ஒளியில் அதிகம் இல்லாதவர்கள், எலும்பு பலவீனமாக உணர்ந்தவர்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

8. Tumor - Marker Test

புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிய உதவும் இந்த பரிசோதனை 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அவசியமாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் கருப்பை புற்றுநோய் கண்டறிய பரிசோதனை முக்கியம். இந்த பரிசோதனையை செய்வதன் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முழுவதும் அகற்றி விட முடியும்.

மேற்கூறிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்து வாழ்வில் வளம் பெறுவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
சிவபெருமானையும் சந்திர பகவானையும் ஒருசேர தரிசித்த பலனைத் தரும் மூன்றாம் பிறை வழிபாடு!
Blood test

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com