புத்தர் கூறிய இந்த உணவு முறையை பின்பற்றினால் உங்களின் 80% நோய்கள் உங்களை விட்டு ஓடிவிடும்!

Buddha Health Secret
Buddha Health Secret
Published on

நமது உடல் ஒரு கோயில் போன்றது , அதை சரியான முறையில் நாம் பராமரிக்க வேண்டும்.புத்தர் நீண்ட ஆரோக்கியத்துடன் ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வது என்பதற்கான போதனைகளை சீடர்களுக்கு வழங்கி உள்ளார்.  புத்தர் முனிவர்கள் போன்று இயற்கையுடன் இணைந்து துறவற வாழ்க்கையை வாழ்ந்தவர். நீண்ட ஆரோக்கியத்துடன் நெடிய ஆயுளுடன் அவர் வாழ்ந்து தனது அறிவுரைகளை பரப்பினார். 

புத்தர் நாம் பின்பற்ற வேண்டிய உணவு முறைகளை பற்றி குறிப்பிடுகிறார்.  உணவு உண்ணும் போது பல நெறிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று அவரது சீடர்களிடம் புத்தர் போதித்துள்ளார். நமது உடலானது ஒரு பிராண சக்தியின் காரணமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பிராண சக்தி தான் நமது உடலின் ஒவ்வொரு இயக்கத்தையும் தீர்மானிக்கிறது. அந்த சக்தி தான் மூளை என்ன வேலை செய்ய வேண்டும்? என்பதை தீர்மானிக்கிறது , என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் ,அடுத்து தொடங்க வேண்டிய செயல் என்ன? என்பதையும் யோசிக்க வைக்கிறது. 

பிராண சக்தி மூளையின் செயல்பாட்டை மட்டும் அல்லாமல் , உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளை கொடுப்பது பிராண சக்தியின் செயல்பாடுகளை குறைத்து விடும். நம் உடலில் பிராண சக்தி இயங்க நிச்சயம் உணவு தேவைப்படுகிறது. அதுதான் உணவை செரிக்க வைத்து உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றுகிறது. 

நல்ல ஆரோக்கியமிக்க மனிதரின் செயல்பாடுகள் அவரது வெளிப்புறத் தோற்றத்திலேயே தெரியும். அவருக்கு எப்போதும் இளமையான தோற்றம் இருக்கும் , முகமும் உடலும் பொலிவுடன் இருக்கும் , அவரது முடிகள் நீண்ட காலம் நரைக்காமல் இருக்கும். ஆனால் , ஆரோக்கியம் குறைந்த மனிதர்களுக்கு இளமை இருக்கும் போதே அவர்களின் முகப் பொலிவு குறைந்து விடும். இளமையில் நரையும் தோன்றி வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்று புத்தர் கூறியுள்ளார்.

புத்தர் தன் சீடர்களிடம் நோய்கள் நீங்கி வாழ ஒரு எளிமையான வழிமுறையை போதித்துள்ளார் . அதன்படி , உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நமது உணவுமுறையே காரணமாக உள்ளது. உணவின் செரிமானம் சூரியனுடன் தொடர்புடையது. சூரியன் இருக்கும் பகல் வேளையில் தான் உடலின் செரிமானம் நன்றாக செயல்படும் , சூரியன் மறைந்த பின்னர் செரிமான சக்தி குறைந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:
இட்லி நம் வாழ்வோடு இணைந்த ஒரு அபாரமான உணவு!
Buddha Health Secret

இந்த நேரத்தில் உணவு சாப்பிடுவது செரிமான சக்தியை பாதிக்கிறது. அது உடல் உறுப்புகள் தூங்க வேண்டிய நேரத்தில் செயல்பட வைக்கிறது. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் உடல் உறுப்புகள் செயல்பாடு நடைபெறத் தொடங்குகிறது. இதனால் ஆழ்ந்த உறக்கம் கெட்டு மனிதர்களின் உடல் நலம் கெட ஆரம்பிக்கிறது.  

நல்ல உறக்கமும் நல்ல செரிமானமும் இருந்தால் ஒருவருக்கு 80% எந்த ஒரு நோயும் அண்டாது. இதனால், புத்தர் தினமும் மாலை சூரியன் மறைவதற்கு முன்னர் உணவு உண்ண சொல்கிறார். அதன் பின்னர் 3 மணி நேரம் கழித்து , இரவு 9 மணி போல உறங்க செல்ல வேண்டும். இதனால் இடைப்பட்ட நேரத்தில் ஜீரணம் எளிதில் நடந்து, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும் , உடல் உறுப்புகள் அனைத்தும் நன்கு ஓய்வு எடுக்கும். அடுத்த நாள் தொடக்கத்தில் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கும். இதனால்,  நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து, உடலினை நோய் தாக்கும் அபாயம் பெருமளவில் குறையும். 

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கு புத்தர் கூறிய 10 உபதேச பொன்மொழிகள்..!
Buddha Health Secret

புத்தர் கூறிய இந்த வழிமுறைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. பல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் மாலை 6 மணிக்கு மேல் உணவு உண்பதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் , உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதோடு, சர்க்கரை நோய் , செரிமானக் கோளாறு , இரத்தம் அழுத்தம் போன்றவை சரியானதாக சில நடிகர்கள் கூறியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com