அற்புதம் செய்யும் முட்டைகோஸ் சூப்! 

Cabbage Soup.
Cabbage Soup.

தென்னிந்திய உணவுகளில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் காய்கறிகளில் முட்டைகோஸும் ஒன்று. குறிப்பாக சைவ விருந்துகளில் பரிமாறப்படும் பிரதான உணவாக இது உள்ளது. முட்டைகோஸ் வைத்து செய்யும் பொரியல்களை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். 

சிலர் முட்டைக்கோஸ் சமைக்கும்போது அதிலிருந்து வரும் வாசனை பிடிக்காமல், அதை தனியாக வேக வைத்து தண்ணீரை முழுவதும் வடிகட்டி சமைப்பார்கள். ஆனால் அப்படி வேக வைத்த முட்டைகோஸ் தண்ணீரைக் குடிப்பதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த நீரில் முட்டைகோஸின் அனைத்து சத்துக்களும் இறங்கி இருக்கும் என்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும்.

முட்டைகோஸுக்கு விஷத்தன்மையை நீக்கும் பண்பு உண்டு. எனவே சிறிய வகை விஷப் பூச்சிகளால் கடிபட்டவர்களுக்கு, முட்டைக்கோஸ் சூப் கொடுப்பது நல்லது. மேலும் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். இத்தகைவர்களின் கல்லீரலை மேம்படுத்த முட்டைக்கோஸ் சூப் பயனளிக்கும். எனவே வாரம் இருமுறையாவது முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீர் குடிப்பது நல்லது.

வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இந்த முட்டைகோஸ் சூப் அருமருந்தாகும். சிலரது முகம் எப்போதுமே சோர்வாக இருக்கும். அவர்களின் சருமம் பொலிவில்லாமல் இருப்பதற்கு கொளாஜன் சுரப்பு குறைவாக இருப்பதே காரணமாகும். இப்படி முகத்தில் பொலிவில்லாமல் இருப்பவர்கள் தினசரி முட்டைகோஸ் சாறு குடிப்பதால் முகம் பொலிவரும். அதேபோல அந்த நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து கழுவினாலும் சருமம் பளபளப்பாக மாறும். 

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், முட்டைகோஸ் ஒரு சூப்பர் சாய்ஸ். நீங்கள் ஏதாவது நிபுணரிடம் பரிந்துரை கேட்டாலும் அவர்கள் முதல் சாய்ஸாக முட்டைகோஸ் பற்றிதான் கூறுவார்கள். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால், இதயத்தில் உண்டாகும் அடைப்புகளையும் சரிசெய்யும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடற்பருமனை குறைக்கிறது. 

இதையும் படியுங்கள்:
முட்டை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?
Cabbage Soup.

முட்டைகோசை நன்கு வேகவைத்து அந்த நீரை பருப்புடன் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகள் நீங்கும். இது கண்ணின் பார்வை நரம்புகளை சீராக்கி, கண் பாதிப்புகளை சரி செய்யும். 

இப்படி முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இதன் அற்புத சக்தியை உணர்ந்து, கட்டாயம் ஒவ்வொருவரும் உங்களின் உணவில் முட்டைகோசை சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் விலையும் குறைவு என்பதால் எல்லா தரப்பு மக்களும் இதை வாங்கி உண்டு பயன்பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com