என்னது! பாதாம் கிட்னி கல்லை ஏற்படுத்துமா?

almonds
Can almonds cause kidney stones?
Published on

பாதாம் உலகெங்கிலும் பரவலாக மக்களால் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்றாலும், சிலர் பாதாம் உட்கொள்வதால் கிட்னி கல் ஏற்படும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மையானது என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.  

பாதாம், மோனோசச்சுரேட்டட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, மற்றும் பல்வேறு விட்டமின்கள், தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். பாதாமில் உள்ள மெக்னீசியம் கிட்னி செல் பாட்டிற்கு அவசியமான ஒரு தாதுப்பொருள். இருப்பினும், ஏன் பாதாம் கிட்னி கல்லை உருவாக்கும் எனக் கூறுகிறார்கள்? 

கிட்னி கற்கள் என்பது சிறுநீரில் உள்ள கனிமங்கள், உப்புகள் படிகமாக மாறும்போது உருவாகும் கற்கள் ஆகும். இவற்றில் பொதுவாக கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் அல்லது பாஸ்பேட் ஆகியவை இருக்கும். கிட்னி கற்கள் உருவாவதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் நீர் குறைவாக குடித்தல், குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது, குடும்ப வரலாறு, சில மருந்துகளை உட்கொள்வது போன்றவை அடங்கும். 

பாதாமுக்கும் கிட்னி கல்லுக்கும் என்ன தொடர்பு? 

பாதாமில் அதிக அளவு ஆக்ஸிலேட் இருப்பதால், இது கிட்னி கற்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம். ஆக்சிலேட் என்பது இயற்கையாகவே ஏற்படும் கனிமம். இது உடலில் உள்ள கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சிலேட் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும். சில ஆய்வுகள், பாதாம் உட்கொள்வதால் கிட்னி கற்கள் உருவாகும் என்பது தொடர்பான முரண்பட்ட முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளன. பெரும்பாலான ஆய்வுகள், பாதாமுக்கும், கிட்னி கல்லுக்கும் எந்த ஒரு தொடர்பையும் கண்டறியவில்லை. 

இதையும் படியுங்கள்:
உங்கள் கிட்னி ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான 6 அறிகுறிகள்! 
almonds

கிட்னி கல் பிரச்சினை உள்ளவர்கள் அல்லது அது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் பாதாம் உட்கொள்ளலைக் குறைப்பது நல்லது. அல்லது தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் பாதாமை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பாதாமை மிதமாக உட்கொள்வது பாதுகாப்பானது. 

பாதாமில் உள்ள ஆக்ஸிலேட் கிட்னி கற்கள் உருவாவதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்றாலும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிட்னி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். எனவே, உங்களது ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, பாதாமை உட்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com