பயறு வகைகளை ஊறவைத்து சமைக்கலாமா?

Pulses
Pulses
Published on

பயறு வாகைகளை ஊறவைத்து சமைப்பது, சமைப்பதற்கு எளிதாக இருக்கும். மேலும் பல ஆரோக்கிய நன்மைகளும் அதில் உண்டு.

பொதுவாக பயறு வகைகள் ஒரு சீசனுக்கு கிடைப்பவை என்றாலும், அவற்றை நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறோம். ஆகையால், அவற்றை சமைப்பதற்கு முன் ஊறவைப்பதால், அதில் உள்ள தூசிகள், தீங்கும் விளைவிக்கும் பொருட்கள் ஆகியவை நீங்கும். அதோடு பல நன்மைகளையும் தருகிறது. அந்தவகையில், ஊறவைப்பதால் கிடைக்கும் நன்மைகள், எப்படி ஊறவைப்பது போன்ற தகவல்களை பார்ப்போம்.

ஜீரண சக்தியை மேம்படுத்தும்:

பீன்ஸில் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் சர்க்கரைகள் உள்ளன. இது ஜீரணிக்க கடினமாக இருப்பதோடு, வாயு மற்றும் வீக்கத்தையும் உண்டு செய்யும். இதுவே நீங்கள் இதனை ஊறவைத்தால், இந்த சர்க்கரை உடைந்து செரிமான பிரச்சனைகளைத் தவிர்த்துவிடும்.

நச்சுகள் நீங்கும்:

சில பீன்ஸ் வகைகள் குறிப்பாக சிவப்பு, சிறுநீரக பீன்ஸ் போன்றவற்றில் லெக்டின்கள் உள்ளன. ஊறவைக்காமல் சமைத்தால் அவை தீங்கு விளைவிக்கும். இதனை ஊறவைக்கும்போது அந்த லெக்டின்கள் நீங்கி நச்சுகளையும் நீக்குகிறது.

சுவையை கூட்டும் ஊறவைத்த பீன்ஸ்:

பொதுவாக பச்சையாக அப்படியே சமைக்கும்போது கசப்புத்தன்மை உணவில் தெரியும். இதுவே ஊறவைத்து சாப்பிட்டால், அந்த கசப்புத்தன்மை சிறிதும் இருக்காது. கூடுதக் சுவை கிடைக்கும்.

பயிறு வகைகளை எப்படி ஊறவைப்பது:

மொச்சைக்கொட்டை, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி போன்ற பயிறு வகைகளில் பயிறுக்கு மேல் இரண்டு அடுக்கு வரை நீர் ஊற்றி 6 முதல் 8 மணி வரை ஊறவைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாட்டாமை படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்… இது எத்தனை பேருக்கு தெரியும்?
Pulses

அவ்வளவு நேரம் ஊறவைக்க நேரமில்லை என்பவர்கள், 1 கப் பயறுக்கு 5 கப் வெந்நீர் சேர்க்க வேண்டும். பிறகு 2- 3 நிமிடங்கள் கொதிக்கவைத்து பிறகு இறக்கி ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்து சமைக்கலாம்.

ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வில் பீன்ஸில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஊறவைப்பது பீன்ஸை இன்னும் மென்மையாக்க செய்யலாம் என்கிறது. ஆனால் பீன்ஸ் வகைகள் வெந்நீரில் ஊறவைக்கும் போது உப்பு சேர்க்கக் கூடாது.

இப்படி பயறு வகைகளை ஊறவைத்து சாப்பிட்டால், வேகமாகவும் சமைக்கலாம், சத்தாகவும் சாப்பிடலாம்.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com