நீரிழிவு நோயாளிகள் லஸ்ஸி குடிக்கலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Lassi Drinking Women
Can Diabetic Patients Drink Lassi?
Published on

லஸ்ஸி என்பது இந்தியாவில் உருவான தயிர் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான பானமாகும். இது பொதுவாக தயிரில் தண்ணீரில் கரைத்து சுவைக்காக சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால், இந்த லஸ்ஸியை குடிக்கலாமா? என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. அதற்கான விடையை இப்பதிவில் பார்க்கலாம். 

நீரிழிவு என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கும் ஒரு நிலையாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கண்காணிக்க வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட்கள் ரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கின்றன. லஸ்ஸி பால் சார்ந்த பானம் என்பதால், பாலில் ஏற்கனவே லாக்டோஸ் என்ற இயற்கை சர்க்கரை உள்ளது. இந்த லாக்டோஸ் லஸ்ஸியின் கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்திற்கு பங்களிக்கிறது.‌ 

நீரிழிவு நோயாளிகள் லஸ்ஸி குடிக்கலாமா? 

நீரிழிவு நோயாளிகள் நிச்சயமாக லஸ்ஸி பானத்தை குடிக்கலாம். ஆனால், அது அவர்களது உணவின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக இந்த லஸ்ஸியை குடிக்கும்போது சில குறிப்புகளை மனதில்கொள்ள வேண்டும்.

குறைந்த கொழுப்பு உள்ள தயிர்: லஸ்ஸி குடிக்க விரும்புவோர், குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பே இல்லாத தயிரை பயன்படுத்தி தயாரிக்கும் லஸ்ஸியை குடிப்பது நல்லது. இது ஒட்டுமொத்த கொழுப்பு உள்ளடக்கத்தை குறைத்து நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. 

செயற்கை இனிப்புகள்: லஸ்ஸில் வழக்கமான சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக செயற்கை இனிப்புகள் அல்லது சர்க்கரைக்கு மாற்றான விஷயங்களைப் பயன்படுத்தவும். இத்தகைய இனிப்புகளில் ஒட்டுமொத்த கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவாகவே இருக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. 

மிதமாகக் குடிக்கவும்: எதையும் மிதமாகவே குடிப்பது நல்லது. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உட்கொள்வதைத் தவிர்க்க எந்த அளவுக்கு லஸ்ஸி குடிக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். உங்கள் தனிப்பட்ட உணவுத் தேவைகளின் அடிப்படையில் குறைவாகவே லஸ்ஸி குடிப்பது நல்லது. 

மசாலா பொருட்கள்: நீங்கள் குடிக்கும் லஸ்ஸியில் ஏலக்காய், லவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் போன்ற மசாலா பொருட்கள் இருப்பதை உறுதி செய்யவும். இந்த மசாலாக்கள் அதிக சர்க்கரை சேர்க்காமல் லஸ்ஸியின் சுவையை அதிகரிக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
வெங்காயம் இருந்தாலே போதும், செம டேஸ்டான Onion Manchurian ரெடி!
Lassi Drinking Women

நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிப்பது முக்கியம். குறிப்பாக லஸ்ஸி அல்லது வேறு ஏதேனும் உணவு உட்கொண்ட பிறகு உங்களது ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் உடலில் வெவ்வேறு உணவுகளுக்கு எந்தெந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு, சரியானபடி உணவுகளை தேர்வு செய்ய உதவும். இந்த வழிமுறையைப் பின்பற்றி லஸ்ஸி மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் எந்த உணவையும் சரியானபடி எடுத்துக் கொள்ளலாம். 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. நீங்களாகவே எந்த முடிவுகளையும் எடுத்து உங்களது உணவு சார்ந்த விஷயங்களில் மாற்றங்களை செய்ய வேண்டாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com