50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கீட்டோ டயட் இருக்கலாமா? 

Can People Over 50 Have a Keto Diet?
Can People Over 50 Have a Keto Diet?
Published on

50 வயதுக்கு மேல் உடல் நலத்தை பார்த்துக் கொள்வது, குறிப்பாக உடல் எடையை நிர்வகிக்க முடியாமல் போவது பலருக்கு கவலையாக உள்ளது. ஆனால், கீட்டோ டயட் போன்ற உணவு முறைகள் உடல் எடையை பராமரிக்க உதவும் எனக் கூறப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த டயட் எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

கீட்டோ டயட் என்றால் என்ன? 

கிடோஜெனிக் அல்லது கீடோ டயட் என்பது கார்போஹைட்ரேட் குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ள உணவு. இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் தங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கடுமையாக குறைத்து, கொழுப்பை முக்கிய ஆற்றல் மூலமாக மாற்றுகிறார்கள். இதன் விளைவாக உடல் கீடோசிஸ் நிலையில் உடல் கொழுப்பை உடைத்து கீட்டோன்கள் எனப்படும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது. இது மூளை உட்பட உடலில் பல்வேறு பகுதிகளுக்கு ஆற்றலை வழங்குகிறது. 

நன்மைகள்: 

கீட்டோ டயட் இருப்பதன் மிகவும் பிரபலமான நன்மை எடை இழப்பு ஆகும். கார்போஹைட்ரேட்டை குறைப்பதன் மூலம் இன்சுலின் அளவு குறைகிறது. இது உடலில் கொழுப்பு சேமிப்பை குறைக்கிறது. மேலும், இதனால் ரத்த சர்க்கரை அளவு நிலையாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கிடோசிஸ் நிலையின்போது உடல் நிலையான ஆற்றல் மூலத்தைப் பெறுகிறது. இதனால், சோர்வு மற்றும் மனச்சோர்வு குறைய உதவும். சில ஆய்வுகள் கீட்டோ டயட் பார்க்கின்சன், அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் என்று கூறுகின்றன. 

தீமைகள்: 

கீட்டோ டயட்டில் பழங்கள், தானியங்கள் மற்றும் பல வகையான காய்கறிகள் கட்டுப்படுத்தப்படுவதால், இது சில முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாட்டை ஏற்படுத்தும். மேலும், இது ‘கீட்டோ ப்ளூஸ்’ எனப்படும் கடுமையான பக்க விளைவுகள், தலைவலி, மனச்சோர்வு, மலச்சிக்கல் மற்றும் தசைப் பிடிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். 

சில ஆய்வுகள் கீட்டோ டயட் இதய நோய் ஆபாயத்தை அதிகரிக்கலாம் என்று கூறுகின்றன. மேலும், இது நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
50 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்? இந்த 7 விட்டமின்கள் முக்கியம்! 
Can People Over 50 Have a Keto Diet?

50 வயதிற்கு மேல்? 

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கீட்டோ டயட் ஏற்றதா என்பது பல காரணிகளைப் பொறுத்துள்ளது. அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலம், மருத்துவ நிலை மற்றும் உடற்பயிற்சி வழக்கம் போன்றவை இதில் அடங்கும். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை இழப்பு மற்றும் BMI குறைப்பதற்கு இது பெரிதளவில் உதவும். மேலும், ரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும் உதவும். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மேம்படுத்த கீட்டோ டயட் உதவும். 

கீட்டோ டயட் இருப்பது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல நன்மைகளை தரக்கூடும் என்றாலும், இது அனைவருக்கும் ஏற்றதல்ல. கீட்டோ டயட்டை தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் முக்கியம். அவர்கள் உங்களின் தனிப்பட்ட சூழ்நிலையை மதிப்பீடு செய்து கிடோ டயட் உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவுவார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com