தினசரி 10,000 அடிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவுமா? 

walking
Can walking 10,000 steps a day help you lose weight?
Published on

உடல் எடையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் நடைப் பயிற்சி ஒரு எளிய மற்றும் பயனுள்ள முறையாகும். தினமும் பத்தாயிரம் அடிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்தப் பதிவில் அந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது என்பதை முழுமையாக ஆராய்வோம். 

நடைப்பயிற்சியின் நன்மைகள்: 

நடப்பது கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் எவ்வளவு வேகமாகவும் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஒரு மணி நேரத்திற்கு 200 முதல் 400 கலோரிகள் வரை எரிக்கப்படலாம். நடைப்பயிற்சியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உடலில் உள்ள கெட்ட LDL  கொழுப்பின் அளவு கணிசமாகக் குறைகிறது. 

தினசரி நடைப்பயிற்சி செய்வதால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதன் மூலமாக சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய் அபாயத்தைக் குறைக்கலாம். நடைபயிற்சியானது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது. இதன் மூலமாக மனநிலை மேம்பட்டு, நமது வேலைகளில் முழு கவனத்துடன் ஈடுபட முடியும். 

நடைப்பயிற்சி எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்வதால் தசைகள் வலுவாகி, காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

தினசரி 10,000 அடிகள் கடினமாச்சே? 

10,000 அடிகள் நடப்பதென்பது ஒரு பெரிய இலக்காகத் தோன்றலாம்.‌ இதை சிறிய இலக்காக உடைத்து படிப்படியாக அதிகரிக்க முடியும். உதாரணத்திற்கு தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 2000 அடிகள் நடக்கிறீர்கள் என்றால், ஒரு வாரம் கழித்து 2500 அடிகளாக அதை அதிகரிக்கவும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தினசரி பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை நீங்கள் எளிதாக எட்டிப் பிடிக்க முடியும். 

இதையும் படியுங்கள்:
உடல் ஆரோக்கியம் காக்கும் புரோட்டீன் சத்தின் அவசியத் தேவை தெரியுமா?
walking

அதே நேரம் எல்லோருக்கும் 10,000 அடிகள் நடப்பது பொருத்தமான இலக்கல்ல. சிலருக்கு குறைவான அடிகள் நடப்பதே போதுமானதாக இருக்கும். உங்கள் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி நிலையப் பொறுத்து உங்களுக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இதற்கு தகுந்த மருத்துவர் அல்லது பயிற்சியாளரை அணுகி ஆலோசனை பெறுங்கள். 

தினசரி பத்தாயிரம் அடிகள் நடப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும். இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உங்களது உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி விகிதத்தைப் பொறுத்து, தினசரி நடைப்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com