50 வயதுக்கு மேல் ஜிம்மில் சேர்ந்து உடல் எடையைக் குறைக்கலாமா? 

gym over 50
gym over 50
Published on

50 வயதிற்கு மேற்பட்ட பலர் உடல் எடையைக் குறைக்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், வயதான காலத்தில் உடல் மாற்றங்கள் ஏற்படுவதால், இளமைப் பருவத்தில் செய்ததைப் போலவே உடற்பயிற்சிகள் செய்ய முடியாது. குறிப்பாக, திடீரென ஜிம்மில் சேர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது உடலுக்கு நல்லதல்ல. இந்தப் பதிவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடையை இழக்க ஜிம்மில் சேர்வது சரியா? என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வோம்.  

வயதான காலத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, வயதாகும்போது உடலில் உள்ள செல்கள் குறைவாக ஆற்றலை எரிக்கின்றன. இதனால், இளமைப் பருவத்தில் இருந்ததைப் போலவே உணவு உட்கொண்டாலும், எடை அதிகரிக்கும். வயதாகும்போது உடலில் ஹார்மோன்களின் அளவு குறையும். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். வயதாவதால் தசை நிறை குறைந்து கொழுப்பு சதவீதம் அதிகரிக்கும். இதனால், உடல் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கும். மேலும், வயதான காலத்தில் மூட்டுகள் மற்றும் எலும்புகள் பலவீனம் அடைவதால், கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. 

ஜிம் சேர்வது சரியா? 

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் திடீரென ஜிம்மில் சேர்ந்து கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது உடலுக்கு நல்லதல்ல. ஏனென்றால், இதனால் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், வயதான காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொண்டு வர முடியாது. ஆனால், இதற்கு அர்த்தம் ஜிம்மில் சேரவே கூடாது என்பதல்ல. மிதமான உடற்பயிற்சிகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜிம்மில் சேர்வதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். மருத்துவர் உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு ஒரு உடற்பயிற்சி திட்டத்தை வகுத்துத் தருவார். 

எடை இழப்புக்கான ஆரோக்கியமான வழிகள்: 

50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடையை இழக்க பின்வரும் பல்வேறு விதமான வழிகளைப் பின்பற்றலாம். 

நீங்கள் முதலில் உங்கள் உணவில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்பு, புரதம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை உண்ணுங்கள். தினசரி நீங்கள் உட்கொள்ளும் கலோரியைவிட குறைவாக உண்ண வேண்டும். இத்துடன் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். 

இதையும் படியுங்கள்:
தினசரி உணவுடன் வெள்ளரி விதைகளை சேர்த்து உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
gym over 50

தினசரி போதுமான நேரம் தூங்குவது உடல் எடை இழப்புக்கு மிகவும் முக்கியம். மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும் என்பதால், உங்களை மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜிம்முக்கு செல்ல முடியவில்லை என்றால் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இத்துடன் வீட்டில் இருந்தபடியே யோகா, சில சில உடல் அசைவுகள் போன்றவற்றை செய்யலாம். 

50 வயதுக்கு மேல் நீங்கள் ஜிம்மில் சேர்ந்துதான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றில்லை. அதற்கு மாற்றாக நீச்சல் பயிற்சி உங்களுக்கு பெரிதளவில் உதவும். இத்துடன் சைக்கிளிங் செய்வது உங்களது கார்டியோ பயிற்சிக்கு மிகவும் நல்லது. மேலும் வீட்டில் இருந்தபடியே லேசாக நடனம் ஆடுவது உங்கள் மனதையும், உடலையும் தளர்த்தி எடையை இழக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com