வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கலாமா?

Can sleep with head facing north?
Can sleep with head facing north?
Published on

பொதுவாக, தூங்கும்போது வடக்கு திசையில் தலை வைத்துப் படுப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கும்போது நம்முடைய தூக்கம் கெடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பூமிக்கு காந்த அலைகள் இருக்கிறது. இதை North pole மற்றும் South pole என்று கூறுவோம்.  அது போலவே, நம் உடலிலும் மின்காந்த சக்தி இருக்கிறது. இவை இரண்டும் சந்திக்கும்போது தூக்கம் தடைப்படும், மனநிம்மதி பாதிக்கும், இரத்த ஓட்டம் தடைப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பூமியின் Magnetic field 50 மைக்ரோ டெஸ்லா ஆகும். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் MRI scanல் Magnetic field அதிகம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இது நமக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை கர்ப்பமான பெண்கள், குழந்தைகள் கூட பயன்படுத்தலாம். இத்தகைய MRI Scanல் 1.5 டெஸ்லா இருக்கிறது. அதாவது, MRI Scanல் இருந்து வரக்கூடிய Magnetic fieldஐ விட பூமியில் இருந்து வரக்கூடிய Magnetic field லட்சம் மடங்கு குறைவாகும்.

இதையும் படியுங்கள்:
கருஞ்சீரகம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
Can sleep with head facing north?

ஆகவே, ஒரு பொருளை ஈர்க்கக்கூடிய அளவிற்கு பூமியின் காந்த சக்தி உறுதியானதில்லை. நம் உடலிலும் Magnetic field என்று எதுவும் கிடையாது. பூமியின் காந்த சக்தி நம்முடைய தூக்கத்தை பாதிக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது பெரிதாக எந்த மாற்றங்களும் தெரியவில்லை. மனிதன் எந்த திசையில் படுத்தாலும் பூமியின் காந்தப்புலம் மனிதனை பாதிக்காது.

உலகில் உள்ள வேறு எந்த நாட்டினருக்கு இதுபோன்ற நம்பிக்கை இருக்கிறதா என்று பார்த்தால், ஜப்பானில் மக்கள் வடக்கு பக்கம் தலை வைத்துப்படுக்க மாட்டார்கள். இதற்கான முக்கிய காரணம், இறந்த பிறகு சவப்பெட்டியை வடக்கு திசையை பார்க்க வைப்பது அவர்களின் வழக்கமாகும். மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாவோரி என்ற பழங்குடியினர் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
30 நாட்களுக்கு சர்க்கரையை குறைப்பதால் இத்தனை நன்மைகளா?
Can sleep with head facing north?

அவர்களும் வடக்கு திசை கெடுதல் என்று சொல்லி தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். இதைத் தவிர வேறு எந்த ஊர்களிலும் இது போன்ற நம்பிக்கை கிடையாது. அறிவியல் பூர்வமாகவும் இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது. எனவே, எந்த திசையில் படுத்தால் நல்ல தூக்கம் வருகிறதோ அந்த திசையில் மக்கள் படுத்து தூங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com