சுவைகளில் முதன்மையான இனிப்பு தரும் சர்க்கரை தற்போது உடல் நல பாதிப்புக்கு முக்கியக் காரணியாக இருப்பதை அனைவரும் அறிவோம். சர்க்கரை என்பது சக்கையாக அரைக்கப்பட்ட கரும்புச் சாறிலிருந்து பெறப்பட்டது என்று பொருள் கொள்ளலாம்.
கரும்பிலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, 100 சதவிகிதம் சுக்ரோஸுடன் வருவதுதான் வெள்ளை சர்க்கரை. அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் என்றால், 90 முதல் 92 சதவிகிதம் சுக்ரோஸ் இருக்கும்.
அளவுடன் இருக்கும்போது இனிக்கும் இந்த சர்க்கரை அதிகமாகும்போது நீரிழிவு பாதிப்பாக மாறுகிறது. நீரிழிவுடன் மேலும் பல பாதிப்புகளைத் தரும் சர்க்கரையை வெறும் 30 நாட்கள் குறைவான அளவு அல்லது தவிர்த்தால் நிகழும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
உடல் மாற்றங்கள்:
1. சர்க்கரை தரும் அதிக கலோரிகள் குறைக்கப்பட்டு கலோரிகள் அளவு சீராகும் என்பதால் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது தகுந்த எடையை பராமரிக்க உதவும்.
2. சர்க்கரை செயலிழப்புகள் மற்றும் ஆற்றல் சரிவுகள் குறைந்து நிலையான ஆற்றல் நிலைகளால் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆற்றல் பெறலாம்.
3. செரிமான அமைப்பை புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற்றி சிறந்த செரிமானம் தந்து மேம்பட்ட குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
4. சர்க்கரை அழற்சிக்கு சார்பானது. ஆதலால் அதன் உட்கொள்ளலைக் குறைப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க வழிவகுக்கும் வாய்ப்பு உண்டு.
மனம் மற்றும் உணர்வு மாற்றங்கள்:
1. மூளையின் வேதியியலில் சர்க்கரையின் தாக்கம் இல்லாமல் மேம்பட்ட மனத் தெளிவையும் கவனத்தையும் அனுபவிக்கலாம்.
2. இரத்த சர்க்கரை அளவுகளில் சர்க்கரையின் ஏற்ற இறக்கமான விளைவுகள் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். சர்க்கரை தவிர்ப்பு மனநிலை மாற்றங்கள் குறைப்புக்கு உதவி, மனநிலையை உறுதியாக்கலாம்.
3. உங்கள் உடல் புதிய ஆற்றல் மூலங்களுக்கு ஏற்றவாறு, சர்க்கரையினால் ஏற்படும் அதீத பசி உணர்வை குறைக்கும்.
4. முப்பது நாட்கள் சுகர் டாக்ஸ் முடிப்பது உங்களுக்கு ஒரு சாதனை உணர்வைத் தருவதோடு, மேம்பட்ட சுய ஒழுக்கத்தையும் அதிகரிக்கும்.
சர்க்கரைக் குறைப்பில் இத்தனை நலன்கள் இருப்பினும் இதில் கவனிக்கவேண்டிய சில சவால்களும் உண்டு.
1. சிலருக்கு சர்க்கரையை நிறுத்தும்போது தலைவலி, சோர்வு அல்லது எரிச்சல் ஏற்படும். திரும்ப சர்க்கரை எடுக்கும் சூழலும் வரலாம். அப்போது அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
2. சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்ப்பது அன்றாட சமூக சூழ்நிலைகளில் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், அவற்றிலிருந்து விடுபடுவது அவசியம்.
3. சர்க்கரையை திடீரென நிறுத்துவதால் பசி தீவிரமாக இருக்கும். குறிப்பாக, முதல் சில வாரங்களில் அதிக பசி எடுக்கும். பசியைப் போக்க முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, இந்த சவாலை தொடர முடியாமல் சர்க்கரையை மீண்டும் எடுக்க விரும்பினால், உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து படிப்படியாக அனுமதியுங்கள்.
இந்த சவாலில் ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது என்பதுடன் அதனால் ஏற்படும் நன்மைகளும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம்.