கோடைக்கால பாதிப்புகளைத் தவிர்க்க உதவும் கேரட்!

Carrot helps prevent summer Problems
Carrot helps prevent summer Problemshttps://www.onlymyhealth.com

காய்கறிகளில் கேரட் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிகமானோர் கேரட்டை பச்சையாகவே உண்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கேரட்டில் அதிக நார்ச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இது ஜீரணத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது மட்டுமல்லாமல் ஹார்மோனை சமநிலைப்படுத்துகிறது.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் சி, பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவற்றால் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.

கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். கேரட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தள்ளன. அவை பிரிரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. ஏனெனில், இது ஆரோக்கியமான சரும செல்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் சருமத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பிற்கு பங்களிக்கிறது. மேலும், கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சில சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக செயல்படுகிறது. அது மட்டுமின்றி, கேரட் ஒட்டுமொத்த நீரேற்றத்திற்கும் பங்களிப்பதோடு, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது. உடல் வறட்சியைத் தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்துகிறது. கேரட் கொலாஜன் உற்பத்திக்கு வழிவகுக்கிறது,

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் கோடைக் காலத்தில் உடல் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். கேரட் ஒரு சிறந்த நீரோட்டமுள்ள காய்கறி. இதன் எடையில் சுமார் 80 சதவீதம் நீர் உள்ளது. இது ஆரோக்கியமான சருமம், செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. கோடைக் காலத்தில் மக்கள் வெளியே செல்வதால் கிருமிகள் மற்றும் வைரஸ்களின் அதிகரிக்கும் தன்மை, நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் கேரட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

கோடைக் காலத்தில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளான மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்னைகளை கேரட் தடுக்கிறது. மேலும் கேரட் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சுகளால் சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும், சூரிய ஒளியால் ஏற்படும் சுருக்கங்களை மற்றும் பிற அறிகுறிகளின் ஆபத்தை குறைக்கிறது.

இன்சுலின் அதிகம் சுரக்க சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும்போது பக்கவிளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது நல்லது. சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம். இதனால் உடனடி பலன் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
மற்றவர் மனதைக் கவர இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Carrot helps prevent summer Problems

கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளன. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை கூர்மையாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்டை நாம் பச்சையாகவோ அல்லது சமைத்து மற்றும் ஜூஸாகவோ உண்ணலாம். ஆனால், கேரட்டை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போதுதான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. கேரட்டை ஜூஸாக குடிப்பதென்றால் அதோடு கொஞ்சம் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து குடிப்பது நல்லது. இவ்வாறு செய்தால் உங்களுக்கு ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலம் கிடைக்கும். கேரட்டின் சத்துக்கள் அப்படியே வேண்டும் அல்லது அதை விட அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் இதை பொரியலாகவோ அல்லது சாம்பாராகவோ சமைத்து பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com