ஆரோக்கியத்தை அள்ளித் தரும் முந்திரி!

health awarness
Cashew
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ரோக்கியப் பலன்கள் பலவற்றை அள்ளித் தருவதில் முந்திரிக்கு முதல் வரிசையிலேயே இடம் உண்டு. நாம் உண்ணும் உணவே பல நேரங்களில் மருந்தாகவும் நோய்கள் வருவதைத் தடுப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் முந்திரி.

முந்திரிப்பழம் மற்றும் முந்திரி இரண்டிலுமே துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும், இது சுவாசக்கோளாறுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடியது. முந்திரியில் நிறைந்துள்ள சத்துக்களானது நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதுடன் நோய்கள் வராமலும் தடுக்கின்றது.

முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம் உள்ளது. 100 கிராம் முந்திரியில் 553 கலோரிகள் உள்ளன. செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் 75 சதவிகிதம் உள்ளன. இவை தவிர நார்ச்சத்தின் அளவும் அதிகம் இருக்கின்றது. அதனால் நாள் ஒன்றுக்கு நான்கு முந்திரி வரை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

முந்திரியில் சோடியம் குறைவாக மற்றும் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க முந்திரி உதவுகிறது. மேலும், முந்திரியில் உள்ள ரசாயனம் பல்வலியைச் சரிசெய்வதோடு, காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

முந்திரியில் காப்பர் அதிக அளவில் இருப்பதால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
நம் மனநலத்தில் தாக்கம் ஏற்படுத்தும் தொழில்நுட்பம்!
health awarness

முந்திரிப் பருப்புக்களை ஒரு கையளவு உட்கொள்வதால், நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுக்குள் வைக்கும்.

முந்திரியில் உள்ள தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உணவில் உட்கொள்வது நல்லது.

டைப் 2 சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. எனவே முந்திரியை அளவுடன் சாப்பிடவேண்டும். முந்திரியில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளது. மேலும் இரத்த நாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு முந்திரி ஆரோக்கியம் தருகிறது.

-கோவிந்தராஜன்.

logo
Kalki Online
kalkionline.com