கண்களில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

eyes irritation
கண் எரிச்சல்https://airdriefamilyeyedoctors.com

சிலர் எப்போதும் கண்களை தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். உடம்பு அரித்தால் சொரிந்து கொள்ளலாம். கண்கள் அரித்தால்? அலட்சியம் வேண்டாம். காரணம் என்னவென்று தெரிந்து அதை சரிசெய்து கொள்வது நல்லது. கண்களைக் கசக்குவது, தேய்ப்பது போன்றவற்றை தவிர்க்கவும். காற்று வறட்சியாக இருந்தால் கண்களில் அரிப்பு ஏற்படும். இதற்கு குளிர்ந்த நீரால் கண்களை கழுவிக்கொள்ளலாம்.

பொதுவாக, ஒவ்வாமை மற்றும் தொற்று காரணமாக கண் அரிப்பு ஏற்படலாம். உலர் கண் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். காற்றின் மூலம் பூக்களிலிருந்து மகரந்தங்கள், தூசி தும்புகள், சிறு பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகளின் சிறு முடிகள், புகை போன்றவற்றால் கண்களில் அரிப்பு, கண் இமைகள் மற்றும் இமைகளின் அடிப்பகுதியில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படும். கண்களில் அரிப்பு, நீர் வடிதல், எரிச்சல் மற்றும் கண்கள் சிவந்துபோதல் போன்றவை உண்டாகும். சில சமயம் காலநிலை மாற்றம் கூட கண்களை பாதிக்கும். கான்டாக்ட் லென்ஸ்களை உபயோகிக்கும்போது ஏற்படும் தொற்று காரணமாகவும் கண் அரிப்பு ஏற்படலாம். கான்டாக்ட் லென்ஸ்கள் சுத்தமாகவும், கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். இதற்கு நாம் கைகளை கழுவாமல் கண்களில் வைத்து நன்கு தேய்த்து விடுவோம். இப்படித் தேய்க்கும்போது கைகளிலிருந்து கண்களுக்கு தொற்றுக் கிருமிகள் பரவும். இதனால் கண்கள் சிவந்து எரிச்சலுடன் காணப்படும். இதற்கு சில எளிய குறிப்புகளை பயன்படுத்த கண் அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.

கண் அரிப்பைப் போக்க:

* ரோஸ் வாட்டர் சிறிதளவு எடுத்து அத்துடன் நீர் கலந்து ஒரு காட்டன் துணியை அதில் நனைத்து கண்களை துடைத்து வர அரிப்பு நீங்கும்.

* காய்ச்சாத பச்சைப் பால் சிறிதளவு எடுத்து பருத்தித் துணியில் நனைத்து கண்களை மூடிக்கொண்டு இமைகள் மீது துடைத்து வர அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
உறவுகளைப் பராமரிக்க உன்னத ஆலோசனைகள்!
eyes irritation

* கெட்டி மோர் சிறிதளவு எடுத்து கண்களை மூடிக்கொண்டு கண்கள் மீது தடவி, சிறிது நேரம் வைத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து துடைக்க கண் அரிப்பு சரியாகும்.

* இரண்டு துண்டு ஐஸ் கட்டிகளை ஒரு பருத்தித் துணியில் சுற்றி கண்கள் மீது சிறிது நேரம் ஒத்தடம் கொடுக்க கண் எரிச்சல், சிவந்து போகுதல், அரிப்பு போன்றவை குணமாகும்.

* வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி கண்கள் மீது வைத்துக் கொண்டு சிறிது நேரம் கழித்து எடுத்து விட, வறண்ட கண்கள் குளிர்ச்சி அடையும். கண் சிவந்து போகுதல், எரிச்சல் போன்றவை குணமாகும்.

* கண்களுக்கு மேக்கப் செய்பவர்கள் தரமான மேக்கப் பொருட்களை உபயோகிக்கவும். படுக்கைக்கு செல்வதற்கு முன் கண் மேக்கப்பை அகற்றுவதும், பாக்டீரியாக்கள் உருவாகாமல் இருக்க மேக்கப் பிரஷ்களை தவறாமல் சுத்தம் செய்வதும் அவசியம்.

* கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை முறையாக சுத்தம் செய்து குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அணிய வேண்டும். நீண்ட நேரம் லென்ஸ்கள் அணிவதை தவிர்ப்பதும், அவற்றை சுத்தமாக பராமரிப்பதும் கண்களில் அரிப்பு, நீர் வடிதலை தடுக்கும்.

* கண்கள் அரிப்புக்கு பொதுவாக மருந்துகளோ, சிறப்பு சிகிச்சைகளோ தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும். இருப்பினும் சில நேரங்களில் தொற்றுப் பிரச்னை அதிகமாக இருப்பின் தகுந்த கண்  மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com