தைராய்டு பிரச்னைகளுக்கு காரணமும், நிவாரணமும்!

மே, 25 உலக தைராய்டு விழிப்புணர்வு தினம்
தைராய்டு பிரச்னைகளுக்கு காரணமும், நிவாரணமும்!
Maggie Blissett

தைராய்டு குறைவாக அல்லது அதிகமாக சுரப்பதுதான் இதயம், எலும்பு, வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு என இவை அனைத்து தொடர்பு வியாதிகளுக்கும் மூலகாரணம். தைராய்டு கோளாறு அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னையாக இருந்து வருகிறது. இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு, தசை பலவீனம், மாதவிலக்கு மாற்றங்கள், சோர்வு, சரும வறட்சி போன்றவை ஏற்படலாம்.

தைராய்டு சுரப்பு பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாமை, அதிக மன அழுத்தம், ஜங்புட் எனும் துரித உணவுப் பொருட்கள். தினமும் அதிக நேரம் உழைப்பவர்களுக்கு ஹைபர் தைராய்டிசம் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் தென் கொரியாவின் நேஷனல் கேன்சர் சென்டர் ஆய்வாளர்கள். இதன் அறிகுறிகள் களைப்பு, மன அழுத்தம், அதிக குளிர் உணர்வு, உடல் எடை கூடுதல் போன்றவை. மற்றவர்களை விட வாரத்தில் கூடுதலாக 10 மணி நேரம் உழைப்பவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் என்கிறார்கள்.

தைராய்டு பிரச்னைக்கு காரணம் அயோடின் சத்து குறைபாடுதான். சைவ உணவு சாப்பிடுபவர்களில் 63 சதவீதம் பெண்களுக்கும், 36 சதவீதம் ஆண்களுக்கும் அயோடின் குறைபாடு இருப்பதாக பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மெடிசின் என்ற சர்வதேச மருத்துவ இதழ் ஆய்வு தெரிவிக்கிறது.

தைராய்டை சரி செய்யும் சத்து அயோடின் மற்றும் செலினியம் சத்துதான். இது அதிகமுள்ள உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்ள தைராய்டு பிரச்னைகளை தவிர்க்கலாம். அந்த வகையில் தைராய்டு கோளாறு ஏற்படுவதை தவிர்க்க உதவும் உணவு வகைகள் எவை என்பதை பார்க்கலாம்.

தைராய்டை தவிர்க்க சீரான அயோடின் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பச்சைக் காய்கறிகளில் அயோடின் சத்து கூடுதலாக இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

தைராய்டு பிரச்னைகளை குறைக்க உதவுபவை வெள்ளரிக்காய் ஜூஸ், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கும் செலரி ஜூஸ், மஞ்சள் மற்றும் மிளகு கலந்த ஜூஸ், தைராய்டு சுரப்பு அதிகரிக்கும் எலுமிச்சை ஜூஸ்.

ஹார்மோன் சீராக சுரக்கவும, தைராய்டு இயக்கத்தை சீராக்கவும் செய்யும் ஆற்றல் உடையது தேங்காய், தேங்காய் எண்ணெய். தேங்காய் பூ தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். தினமும் காலையில் தேங்காய் பூ சாப்பிட்டுவந்தால், தைராய்டு சுரப்பு குறைபாட்டை முற்றிலும் குணமாக்கும். உடலுக்கு தேவையான மினரல்ஸ் தேங்காய் பூவில் உள்ளதால் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

பெர்ரி பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரி போன்றவை சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருக்கின்றன. பயோமெடிசின் மற்றும் பார்மகோதெரபி சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தைராய்டு செயலிழப்பை நிர்வகிக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் குவெர்செடின் போன்ற முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும் தைராய்டு செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும், ஆப்பிள்கள் உங்கள் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவும் வைட்டமின் டி இயற்கையாகவே உள்ள சில உணவு வகைகளில் முட்டையும் ஒன்றாக உள்ளது. முட்டையில் ஐயோடின் மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி மற்றும் சமநிலைக்கு அவசியமானதாக இருக்கிறது.

தயிர் அயோடின் பெறுவதற்கான சிறந்த மூலமாக உள்ளது. இது தைராய்டு செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இதில் நிறைந்திருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது.

இதையும் படியுங்கள்:
தேனீக்களின் விசித்திர வாழ்க்கை முறை பற்றி தெரியுமா?
தைராய்டு பிரச்னைகளுக்கு காரணமும், நிவாரணமும்!

பூசணி விதைகள் தைராய்டு சீராக செயல்பட உதவுகிறது. இதில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை தைராய்டு ஹார்மோன் தொகுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதைகளை வழக்கமாக உட்கொள்வது சீரான தைராய்டு செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

வாழைப்பழம் தைராய்டு பிரச்னையின் அறிகுறிகளான நரம்பு பழுதடைதலை சரி செய்கிறது. மேலும், நரம்பு பிரச்னைகளை முற்றிலும் நீக்கி விடுகிறது. ஹைபோ தைராய்டிசம் பிரச்னைக்கு வாழைப்பழம் சிறந்த தீர்வு தரும். எனவே வாழைப்பழத்தை எந்த பயமும் இல்லாமல் சாப்பிடலாம்.

தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் ‘காய்ட்ரோஜன்’ எனும் வேதிப்பொருள் நிறைந்த சோயா, சிலுவை காய்களான முட்டைக்கோஸ், காலிபிளவர், முளைகட்டிய பயிறுகள் இவற்றை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com