நெஞ்செரிச்சலால் தூக்கமே வரலையா? இந்த பக்கம் திரும்பி படுத்தா போதும், நிம்மதியா தூங்கலாம்!

Acidity
Acidity
Published on

பண்டிகை தினங்கள் அல்லது கொண்டாட்ட தினங்களில் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளும் போது ஒரு சிலருக்கு வயிற்றில் இருக்கும் உணவுகள் புளிப்புடன் மேலே வந்து வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்செரிச்சலை தரும். இதை எதுக்களிப்பு என்று நம் பாட்டிமார்கள் சொல்வார்கள்.

இந்த நெஞ்செரிச்சலுக்கு அன்று வீட்டிலேயே கை வைத்தியங்கள் செய்து கொள்வார்கள். குறிப்பாக வரப்போகும் தீபாவளி பலகாரங்களை அதிகம் சாப்பிட்டால் உடனே தீபாவளி லேகியத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உண்டு. ஏனெனில் அந்தப் பலகாரங்களில் எண்ணெய் சேர்ந்திருக்கும். அது அதிகப்படியான எண்ணெய் நெஞ்செரிச்சல் தரும் என்பதால் அதை தவிர்க்கவே தீபாவளி லேகியத்தை சாப்பிடுவார்கள். இங்கு நெஞ்செரிச்சல் பற்றிய சில தகவல்களை காண்போம் .

ஒரு சிலர் அல்சரையும் நெஞ்செரிச்சலையும் போட்டு குழப்பிக் கொள்கின்றனர். ஆனால் இரண்டும் ஒன்று அல்ல. இரண்டும் வெவ்வேறு வகையானவை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .நெஞ்செரிச்சல் உடனடியாக தீர்வு காண வேண்டிய ஒரு விஷயம் .

உதாரணமாக சோடாவை எடுத்துக் கொள்வோம். அதை ஒரு குலுக்கு குலுக்கி நாம் திறக்கும் போது எப்படி அதில் உள்ள ஆசிட் பீச்சு அடிக்கிறதோ அதே போல் தான் வயிற்றில் இருக்கும் உணவுகளின் மாறுபாடுகளால் உணவுக்குழாய் வழியே மேலே வரும் உணர்வுகள் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஆக எரிச்சல் தருகிறது.

நெஞ்சு எரிச்சலுக்கான அறிகுறிகளாக இவைகள் கூறப்படுகிறது:

1. சாப்பிட்டுவிட்டு படுக்கும் போது நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு.

2. புளிப்பு ஏப்பத்துடன் வாயில் புளிப்பு தன்மை

3. வாந்தி உணர்வு

4. தொண்டையில் ஏறும் உணவின் எரிச்சல்

5. நாள்பட்ட இருமல்

6. மிதமான நெஞ்சு வலி

7. குரல் கரகரப்பு (இரவில்)

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் இது நிச்சயம் நெஞ்செரிச்சலுக்கான நெஞ்செரிச்சல் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

எதனால் இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது?

நாம் எடுக்கும் உணவு 25 சென்டிமீட்டர் நீளமான உணவு குழாய் மூலம் வயிற்றில் சென்று அடைகிறது. வயிற்றுக்கும் உணவு குழாய்க்கும் இடையில் உணவுகளை கட்டுப்படுத்தும் வால்வு தளர்வு ஆகும் பட்சத்தில் இது போன்ற நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

வால்வு தருவதற்கான காரணங்கள் என்ன?

1. அதிகமான உடல் எடை.

2. உத்தர விதானம் வழியே வயிறு வெளியே வருதல் (Hiatus Hernia).

3. சாப்பிட்ட உடனே படுப்பது.

4. சாப்பிடும் முறை.

5. சாக்லேட் , காபி, காரம், மது போன்றவைகள்.

6. நிக்கோடின் (Nicotine).

7. கர்ப்ப காலத்தில் இயல்பாக ஏற்படும் உடல் பெருக்கம்.

நெஞ்செரிச்சல் தரும் உணவுகளில் சில தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, வினிகர் கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிக புளி சேர்ந்த உணவுகள் நெய் எண்ணெய், பிரியாணி, வத்தல், வடாம் , பக்கோடா பரோட்டா போன்ற எண்ணெய் உணவுகள்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு அடியில் விபத்து: உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!
Acidity

எவற்றையெல்லாம் எடுத்தால் நெஞ்செரிச்சல் வராது?

ஆப்பிள் ,தர்பூசணி ,வாழைப்பழம் போன்ற பழங்கள், முழு தானியங்கள் ,வெள்ளரி, உருளைக்கிழங்கு (மசால் சேர்த்தாதது) மிதமான எண்ணெய் ஊற்றிய உப்புமா, இட்லி ,இடியாப்பம் ,தேங்காய்ப்பால் பூசணிக்காய், கஞ்சி வகைகள் போன்றவைகளை எடுக்கலாம் .

நெஞ்செரிச்சலுக்கான இயற்கை தீர்வுகள்:

சுக்குடன் வெல்லம்ம் சேர்த்து சாப்பிடுதல் மற்றும் இளநீரில் அரை ஸ்பூன் சீரகத்தை விட்டு குடிப்பது உடனடியாக நெஞ்செரிச்சலுக்கான தீர்வாகும் இதைத்தவிர எப்போதும் வீட்டில் ஏலக்காய் பொடி வைத்துக் கொள்வது நல்லது .நெஞ்செரிச்சல் தோன்றினால் உடனடியாக ஏலக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் மட்டுப்படும். காரணம் தயிறு குளிர்ச்சி என்பதால்.

இதேபோல் வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவதும் இயற்கை அமில முறிப்பானாக உதவுகிறது . கடுக்காய் ஊற வைத்த நீர் மற்றும் துளசி டீ போன்றவைகளும் நெஞ்செரிச்சலுக்கு தகுந்த வீட்டு வைத்தியங்கள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
சாதனைப் பெண்மணி அன்னா மணி: மறக்கப்பட்ட இந்திய வானிலை விஞ்ஞானி!
Acidity

நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கைகள்:

1. உணவை நன்றாக மெதுவாக மென்று சாப்பிடுதல்

2. சாப்பிட்டவுடன் படுக்காமல் 3 மணி நேரம் இடைவெளி விட்டு பின் படுக்க செல்வது

3. படுக்கும் போது தலையணை வைத்து உறங்குவது.

4. Wright சைடு படுக்காமல் left சைடு படுப்பது

5. அணியும் உடைகள் வயிற்றை இறுக்காமல் தளர்வாக இருப்பது.

6. யோகா தியானம் போன்றவகளை பயில்வது

7. உணவின் இடையில் நிறைய நீர் குடிக்காமல் உணவு உண்டு முடித்த பின் 15 நிமிடங்கள் கழித்து நீரை குடிப்பது. 8.சரியான தூக்கம்

9. புகை மது ஆகியவற்றை தவிர்ப்பது 10.அதிக காரம் உணவுகளை எடுக்காமல் வாழை இலையில் உணவு உண்பது போன்றவைகளை கடைபிடித்தால் நெஞ்செரிச்சலை வரவிடாமல் தடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஆங்கில மாத பெயர்களுக்குப் பின்னால் இத்தனை பெரிய ரகசியம் இருக்கிறதா?
Acidity

குறிப்பாக நெஞ்செரிச்சலுக்கான ஆங்கில மருந்துகள் உடனடி நிவாரணம் தந்தாலும் அதை மருத்துவ ஆலோசனையின்றி நீண்ட நாட்கள் எடுப்பது நல்லது அல்ல. வாந்தியில் ரத்தம், இடைவிடாத தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி போன்றவைகள் இருந்தால் உடனே மருத்துவரை பார்ப்பதுதான் சரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com