நடக்கும்போது மூச்சிரைப்பதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

Causes of shortness of breath
Causes of shortness of breath
Published on

மூச்சு வாங்குவது, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை பல காரணங்களால் ஏற்படும். இது சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஒரு நிலையாகும். மூக்கடைப்பு, நாசி துவாரத்தில் சதை வளர்ச்சி, மூக்குத்தண்டு வளைந்து இருப்பது, நுரையீரல் பிரச்னை, சைனஸ் பிரச்னை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் காரணமாகவோ அல்லது இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் சிறுநீரகங்களில் பிரச்னை இருந்தாலும் கூட மூச்சு வாங்கலாம்.

உடற்பயிற்சி, ஓடுதல் அல்லது உடலை வருத்தி வேலை செய்த பிறகு மூச்சு வாங்குவது இயல்பானது. ஆனால், அந்த இயல்பையும் தாண்டி சாதாரணமாக வேலை செய்தாலே மூச்சு வாங்குகிறது என்றால் தகுந்த மருத்துவரிடம் சென்று காரணத்தை அறிந்துகொண்டு சரிசெய்ய வேண்டியது அவசியம். இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் இதுபோன்று மூச்சு வாங்குதல் பிரச்னை ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
ஆங்கில அகராதி முதலில் தொகுக்கப்பட்ட சுவையான வரலாறு!
Causes of shortness of breath

சிலருக்கு படிக்கட்டில் ஏறும்பொழுதும், வேகமாக நடக்கும்போதும் மூச்சு வாங்குகிறது என்றால் இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறி எனக் கொள்ளலாம். ஆண்களை விட, பெண்களுக்குத்தான் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரப்போக்கு, மகப்பேறு சமயத்தில் உடல் ரீதியான மாற்றங்கள், சத்தான உணவை உட்கொள்ளாமல் இருப்பது போன்றவை காரணமாக இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

அறிகுறிகள்: மார்பில் இறுக்கம் போன்ற உணர்வு, ஆழ்ந்த சுவாசம் எடுப்பதில் சிரமம், வேகமான இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல் அல்லது விரைவான சுவாசம் (இதில் இரண்டு வகைகள் உள்ளன). ஒன்று, மூச்சுத் திணறல் என்பது சில உடற்பயிற்சிகள், ஒவ்வாமை, குளிர்ச்சி, பதற்றம் போன்றவற்றால் ஏற்படலாம். இவை நீண்ட காலம் நீடிக்காது. உடல்நிலை சீராகி விட்டால் இந்த மூச்சு பிரச்னையும் சரியாகிவிடும்.

இரண்டாவது, நாள்பட்ட மூச்சுத் திணறல். ஆஸ்துமா, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை போன்ற உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
குறுகிய கால ஞாபக மறதிக்கு மருந்தாகும் உடற்பயிற்சிகள்!
Causes of shortness of breath

காரணங்கள்: குறைந்த இரத்த அழுத்தம், ஒவ்வாமை, அதிக வெப்பம் அல்லது மிகவும் குளிர்ந்த நிலை, மன அழுத்தம், கவலை, நிமோனியா, இதயப் பிரச்னைகள், நாள்பட்ட மூச்சுக் குழாய் அழற்சி, ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

சிகிச்சைகள்: குறுகிய கால பிரச்னைகள் தானாகவே சரியாகிவிடும். நீண்ட நாள் பிரச்னைக்கு மூல காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். உடல் பருமன் மூச்சுத் திணறலுக்கு ஒரு முக்கியமான காரணம். எனவே, உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு போன்றவை உதவும். சுவாசப் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு அவர் கூறும் சுவாசப் பயிற்சிகளை செய்வது பலன் தரும்.

நுரையீரல் பிரச்னைகளுக்கு பொதுவாக புகை பிடித்தல் காரணமாக இருக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உண்டு. இவர்கள் புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது, நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். மூச்சுத் திணறலுக்கான காரணங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த மருத்துவரை அணுக எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com