இதை மட்டும் செஞ்சா போதும்! பாத வீக்கம் மாயமா மறையும்!
பாதங்களில் வீக்கம் ஏற்படுவது தற்போது பெரும் பிரச்னையாக மாறிவிட்டது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்று வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் கால் வீக்கம் ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனை கவனித்தால் எவ்வித பிரச்னைக்கும் இடமில்லை. அந்த வகையில் கால் வீக்கத்தை குணமாக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
கால் வீக்கத்திற்கான காரணங்கள்
சிறுநீரக பிரச்னைகளுக்கு மட்டும் காலில் வீக்கம் ஏற்படுவதில்லை.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பதாலும்,
நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றபடி வேலை பார்ப்பதாலும்,
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போதும்,
முறையாக வியர்வை மற்றும் சிறுநீர் வெளியேறாமல் உடலில் தேங்கி இருந்தாலும் காலில் வீக்கம் ஏற்படும்.
பாத வீக்கத்திற்கான எளிய வைத்திய குறிப்புகள்
1. ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளை கால் வீக்கத்தை குணமாக்க பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து அதை பேஸ்ட் போல செய்து, வீக்கம் உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் சூடான நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.
2. கால் வீக்கத்திற்கு பேக்கிங் சோடா மிகவும் உதவுகிறது. அதற்கு முதலில் இரண்டு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பின்பு அதை வடிகட்டிய நீருடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து அதை பாதங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் மேம்படுவதோடு பாதங்களில் ஏற்பட்டிருக்கும் வீக்கமும் குணமாகும்.
3. அடிக்கடி பாதங்களில் வீக்கம் ஏற்படுபவர்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அதற்கு முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை சூடாக்கிக்கொண்டு அதில் பூண்டு மற்றும் கிராம்புகளை சேர்த்து வறுத்து பிறகு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது இந்த எண்ணெயை வீக்கம் உள்ள இடத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத வீக்கம் குறைவதோடு வலியும் குறையும்.
4. ஐஸ்கட்டி ஒத்தடமும் கால் பாதங்கள் வீங்கி இருந்தால் கொடுக்கலாம் இதன்மூலம் பாத வீக்கம் குறையும்.
5. கல் உப்பு பாத வீக்கத்தை குணப்படுத்தும். இதற்கு முதலில் சூடான நீரில் கல் உப்பு சேர்த்து அதில் காலை சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கால் வீக்கம் குணமாவதோடு வலியும் நீங்கும்.
மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்தியங்கள் மூலம் பாத வீக்கம் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)