செர்ரி பழத்தின் சிகப்பு: பெண்ணின் உதடுகளின் ரகசியம்!

Cherry and lips
Cherry and lips
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

செர்ரி (Cherry) பழத்தை பெண்களின் உதட்டுக்கு இலக்கணமாகக் கூறுவது உண்டு. சிவப்பு நிறமான செர்ரி சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கவர்ச்சியான பழம். செர்ரி பொதுவாக கேக்கு, டார்ட்ஸ், இனிப்பு பொருட்களை அலங்கரிக்கவும் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்ட உணவிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சிவப்பு செர்ரிகளும் அதன் சாறும் கீல்வாதம் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றின் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன. சிவப்பு செர்ரி சாறு இரத்தத்தில் யூரிக் அமில அளவுகளை குறைக்க உதவுகிறது. செர்ரி பழம் ரோசாசியே என்னும் குடும்ப வகையை சேர்ந்தது ஆகும். நம் உடலின் வியர்க்காத பகுதி உதடு தான். முகக் கவர்ச்சிக்கு உதடுகள் ஒரு முக்கியக் காரணம். உதடு மட்டும் அழகாக இருந்தால் போதாது, பற்களையும் பாதுகாக்க வேண்டும்.

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களைப் போல் உதட்டு சிரிப்புக்கும் பங்கு உண்டு. வைட்டமின் குறைபாட்டினால் உதடுகளில் புண்கள், இரத்தம் வடிதல் போன்றவை வரலாம். அதற்கு நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

செர்ரி (Cherry) பழத்தின் பயன்கள்:

செர்ரி பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரி பழத்தில் ஆயிரம் முதல் 3000 மில்லி கிராம் வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. செர்ரி பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும்.

சிவப்புச் செர்ரிகளில் உள்ள அதிக ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு அதிசயத்தை செய்கின்றன. செர்ரி சாறு முகப்பரு, வல்கரிஸ் மற்றும் ரொஸசியா ஆகியவற்றிற்கான மாற்று சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! டீக்கடைக்கு போகும் முன் இதை ஒருமுறை படிங்க!
Cherry and lips

பெண்களின் உதட்டிற்கும் செர்ரி பழத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால், இயற்கை ரசாயனமாக பெண்களின் உதடுகளில் பூச இது பயன்படுத்தப்படுகிறது. இன்சோமியா எனப்படும் தூக்கக் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் செர்ரி பழ ஜூஸ் குடிப்பதன் மூலம் அந்த நோயினை குணப்படுத்தலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com