தலைவலி தானேன்னு விடாதீங்க..! இது பேராபத்தாகலாம்! எப்போது அலர்ட் ஆகணும்?

Chronic headache
Chronic headache
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நாள்பட்ட தலைவலி (Chronic headache) நம் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். எளிய பணிகளைக் கூட பெரிய சவால்களாக உணர வைக்கும். நாள்பட்ட தலைவலி என்பது 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக ஏற்படும் தலைவலியை குறிக்கும். இவை நம் தூக்கத்தையும், வேலை செய்யும் திறனையும் குறைக்கும்.

நாள்பட்ட தலைவலிக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்:

  • தலைவலிக்கான காரணங்கள் நபருக்கு நபர் மாறுபடும்.

  • பதற்றம் மற்றும் மன அழுத்தம். தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இறுக்கத்தை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.

  • மோசமான தூக்கப்பழக்கம் மற்றும் தூக்கமின்மை

  • மோசமான தோரணை, குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும்பொழுது அல்லது மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் ஈடுபடும்போது, தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலியை தூண்டும்.

  • ஒற்றைத் தலைவலி, சைனஸ் தொற்றுகள் காரணமாகவும் ஏற்படலாம்.

  • நீரிழப்பு காரணமாக அதாவது போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் தலைவலி.

  • பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்.

  • காஃபின், ஆல்கஹால் போன்றவை சிலருக்கு தலைவலியை தூண்டும். சில மருந்துகள் பக்கவிளைவுகளாக தலைவலியை ஏற்படுத்தலாம்.

  • சுற்றுச்சூழல் காரணிகள் அதாவது உரத்த சத்தம், வலுவான வாசனை, பிரகாசமான விளக்குகள் போன்றவை. வானிலை மாற்றங்கள் கூட காரணமாகலாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்:

திடீரென மிகக் கடுமையான வலி ஏற்பட்டால் (thunderclap headache).

வலி வழக்கத்தை விட தீவிரமாக இருந்தாலோ, அடிக்கடி அல்லது நம் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தாலோ, சாதாரண வலி நிவாரண மருந்துகளால் குறையாத போதோ மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.

குமட்டல், வாந்தி, காய்ச்சல், பார்வை மாற்றங்கள் போன்ற அறிகுறிகளுடன் தலைவலி வந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து சரியான சிகிச்சையை பெற வேண்டியது அவசியம்.

நாள்பட்ட தலைவலிக்கான வீட்டு வைத்தியம்:

  • தலைவலியிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு கைவைத்தியமாக சில முறைகளை பின்பற்றலாம். நெற்றியில் அல்லது கழுத்தில் குளிர்ந்த துணியைக் கொண்டு ஒத்தடம் போல் வைத்தெடுப்பது வலியை குறைக்கும்.

  • உச்சந்தலையில், கழுத்தில், நெற்றிப் பகுதியில் மெதுவாக மசாஜ் செய்வது சதை இறுக்கத்தை போக்கும்.

  • நிறைய தண்ணீர் குடிப்பது குறிப்பாக நீரிழப்பால் ஏற்படும் தலைவலிக்கு உதவும். யூகலிப்டஸ் (Eucalyptus) அல்லது மிளகுக் கீரை எண்ணெயை சிறிது முகர்ந்து பார்ப்பது தலைவலியை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி தலைவலி வந்தால் ஜாக்கிரதை!
Chronic headache
  • போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கு தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சி உதவும். கணினி அல்லது மொபைல் திரைகளை பார்ப்பதை குறைப்பதும் பலன் தரும்.

  • இஞ்சி டீ குடிக்கலாம். லவங்கப்பட்டை பொடி சேர்த்த சூடான பால் அருந்தலாம். கிராம்பின் வாசனையை முகர்வதும், சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக் கொள்வதும் நல்ல பலன் தரும்.

    (முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com