1 மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

sugar
sugar
Published on

இனிப்பு சுவை மனிதர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். சர்க்கரை, இனிப்பின் முக்கிய மூலமாக இருப்பதால், நம் உணவில் அதிக அளவில் இடம்பெறுகிறது. ஆனால், அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பல தீமைகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பதிவில், ஒரு மாதத்திற்கு சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பற்றி பார்க்கலாம். 

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: 

திடீரென நீங்கள் சர்க்கரை சாப்பிடுவது குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைத்து பல்வேறு விதமான உடல் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

சர்க்கரை அதிக கலோரிகள் நிறைந்தது. அதைக் குறைப்பதால் கலோரி உட்கொள்ளல் குறைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக தொப்பை பகுதியில் உள்ள கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். 

சர்க்கரை நம் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்றாலும், அது விரைவாகவே ஆற்றலை இழக்கச் செய்துவிடும். சர்க்கரை இல்லாத உணவுகளை சாப்பிடுவதால், உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறுவதால் நாள் முழுவதும் அதிக ஆற்றலுடன் நீங்கள் இருப்பீர்கள். 

சர்க்கரை சாப்பிடும்போது மூளையில் Dopamine என்ற வேதிப்பொருள் வெளியாகும். இது நம் மனநிலையை சிறப்பாக மாற்றும் ஒரு தற்காலிக வேதிப்பொருள். சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்ப்பதால், மனநிலை சீராகி மன அழுத்தம் குறையும். 

அதிகமாக சர்க்கரை உட்கொள்வது தூக்கத்தை பாதிக்கும். அதுவும் இரவில் சர்க்கரை உட்கொண்டால் சரியாக தூக்கம் வராது. சர்க்கரை இல்லாத உணவுமுறையால் தூக்கம் சீராகி, நல்ல தரமான தூக்கத்தைப் பெற முடியும். 

சர்க்கரை கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதால் ரத்த கொழுப்பின் அளவு குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவு திடீரென உயரக் காரணமான 7 வகை உணவுகள்!
sugar

அதிக சர்க்கரை ரத்தத்தில் உள்ள கொலாஜனை பாதித்து, சருமம் சுருங்கி போகச் செய்யும். எனவே, சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதால் சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் மாறும். 

ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால் உடலில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். எந்த ஒரு உணவு முறையையும் மாற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சர்க்கரை முற்றிலும் இல்லாத உணவு முறையைப் பின்பற்றுவது கடினமாக இருந்தால், படியாக சர்க்கரை உட்கொள்வதைக் குறைத்து ஆரோக்கியமான முறையில் மாற்றங்களை செய்யலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com