நாம் அன்றாடம் தேங்காய், இளநீர், வழுக்கை என சாப்பிடுவோம். ஆனால் தேங்காய் பூவை அதிகம் சாப்பிட்டு இருக்க மாட்டோம். தேங்காய் பூ என்பது நன்றாக முற்றிய தேங்காயில் தோன்றும் கரு வளர்ச்சியே.
இளநீர் மற்றும் தேங்காயில் இருக்கக் கூடிய சத்துக்களை விட இது அதிக சத்துக்களைக் கொண்டது. தேங்காய் பூவின் மருத்துவ பலன்களை தெரிந்து உபயோகிக்க நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இதில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்டு வர, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோய்கள் நம்மை அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேங்காய் பூ வாய்ப்புண், வயிற்று புண்ணை ஆற்றும் சக்தியைக் கொண்டது. தேங்காய் பாலை விட இதை எளிதாக அப்படியே சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தேங்காய் பூ உதவுகிறது. இது இன்சுலினை தூண்டி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. உடல் அசதியைப் போக்கி புத்துணர்வைத் தருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தேங்காய் பூ சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதனால் உணவு அதிகம் எடுத்துக்கொள்ள தேவை இருக்காது. இதுவே உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. செரிமான கோளாறை சரிசெய்து குடல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கிறது. ரத்தத்தில் சேரக் கூடிய கொழுப்பை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
குடலில் தங்கியுள்ள நாள்பட்ட கழிவுகளை வெளியேற்றுகிறது. பாத வலி, பாத எரிச்சலை போக்குகிறது. தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்து மீண்டும் வராமல் தடுக்கிறது.
தேங்காய் பூ சிறுநீர் தொற்றை சரிசெய்யும். உடலின் வளர்சிதை மாற்றத்தின் தூண்டுதலால் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டதால் சரும சுருக்கங்களையும் நீக்குகிறது.
வளரும் குழந்தைகளுக்கு பொரித்த ஸ்நாக்ஸ், ஸ்வீட் கொடுப்பதற்கு பதில் தேங்காய் பூ கொடுக்க அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படும்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.